ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

30 வருட சினிமா வாழ்க்கை.. மூடர் கூடம் இயக்குனர் மூலம் வெளிவந்த பிரகாஷ்ராஜின் உண்மை முகம்

நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இந்திய மொழி சினிமாக்களில் முன்னணி நடிகராக இருக்கிறார். தன்னுடைய வசன உச்சரிப்பு, உடல் அசைவுகளை வைத்தே வில்லத்தனமாக மிரட்டக்கூடிய நடிகர் இவர். தளபதி விஜய் நடித்த கில்லி திரைப்படத்தில் இவர் நடித்த முத்துபாண்டியன் கேரக்டர் இன்றுவரை யாராலும் மறக்க முடியாது.

முதலில் ஒரு வில்லனாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய பிரகாஷ்ராஜ் , தற்பொழுது குணச்சித்திர நடிகராகவும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். 90ஸ், 20ஸ்களில் இவருடைய வில்லத்தனத்தை யாராலும் மறந்துவிட முடியாது. இவர் முதன்முதலில் மொழி திரைப்படத்தில் காமெடியிலும் கலக்கி இருந்தார்.

Also Read: பிரகாஷ்ராஜின் உண்மை முகம்.. 50 கோடி கொடுத்தாலும் அந்த மாதிரி நடிக்க மாட்டேன்

30 வருடங்களாக இந்திய சினிமாவில் சிறந்த நடிகராக இருக்கும் பிரகாஷ்ராஜின் இன்னொரு முகத்தை, மூடர் கூடம் பட இயக்குனர் நவீன் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். நவீன் பொதுவாகவே சினிமா என்பதையும் தாண்டி சமூக அக்கறை அதிகம் உள்ளவர்.

ஆண் துணை இல்லாத ஒரு குடும்பத்தில், ஒரு பெண் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். பொருளாதார வசதி இல்லாததால் என்ன செய்வது என்று திகைத்து கொண்டு இருந்த அந்த பெண்ணின் தாயைப் பற்றி நவீனுக்கு தெரிந்திருக்கிறது. நவீன் இதைப் பற்றி நடிகர் பிரகாஷ்ராஜிடம் சொல்லி இருக்கிறார்.

Also Read: தனுஷ்-பிரகாஷ்ராஜ் கூட்டணியில் வெளியான 4 படங்கள்.. உங்களுக்கு பிடித்த படம் எது

பிரகாஷ் ராஜ் அந்தப் பெண்ணுக்கு ஏதோ ஒரு சிறிய உதவி செய்து விடுவோம் என்று இல்லாமல், அந்தப் பெண்ணின் முழு படிப்பு செலவையும் ஏற்று இங்கிலாந்தில் படிக்க வைத்திருக்கிறார். படிக்க வைத்ததோடு வேலைவாய்ப்பையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அந்த குடும்பமே அவரை வாழ்த்தியிருக்கிறது. இதை இயக்குனர் நவீன் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த விஷயம் தெரிந்தவர்கள், பிரகாஷ்ராஜை பாராட்ட இருக்கிறார்கள். ஆனால் பிரகாஷ் ராஜோ இந்த உலகம் எனக்கு என்ன செய்ததோ அதை நான் திரும்ப செய்ய கடமைப்பட்டிருக்கிறேன் என்று சொன்னாராம். இன்றைய நடிகர்களும், அரசியல்வாதிகளும் கண்டிப்பாக இது போன்ற ஒரு விஷயத்தை நடிகர் பிரகாஷ்ராஜிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

Also Read: பெண் மோகத்தில் வில்லனாக பிரகாஷ்ராஜ் மிரட்டிய 5 படங்கள்.. மச்சினிச்சியை அடைய நினைத்த வில்லத்தனம்

Trending News