கோவிலுக்கு பெண்கள் போகக்கூடாதுனு எந்த சாமி சொல்லுச்சு.. புது சர்ச்சையுயை கிளப்பியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அண்மைக்காலமாக பெண்களை மையமாக வைத்து உருவாகும் கதைக்களத்தில் உள்ள படங்களில் அதிகமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.அவரது படங்களும் விமர்சன ரீதியாக நல்ல ஒரு வெற்றியையே பெற்று வருகிறது. இந்த வருடத்தில் மட்டும் ஐஸ்வர்யா ராஜேஷின் கையில் 5க்கும் அதிகமான படங்கள் உள்ளது.அதில் ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் ரன் பேபி ரன், தி கிரேட் இந்தியன் கிச்சன் உள்ளிட்ட படங்கள் வரும் பிப்ரவரி மாதம் ரிலீசாக உள்ளது.

இதனிடையே ஐஸ்வர்யா ராஜேஷ் பொதுவாக தன மனதில் பட்டத்தை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் பேசக்கூடியவர். அந்த வகையில் அண்மைக்காலமாக சபரிமலையில் பெண்கள் ஏன் அனுமதிப்பது கிடையாது, ஏன் பெண்கள் போகக்கூடாது உள்ளிட்ட பல விவாதங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சில அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் மாறி மாறி தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

Also Read: 2022 ஆம் வருடத்தின் 5 சிறந்த நடிகைகள்.. தொட்டதெல்லாம் துலங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது இந்த பிரச்சனை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். 2021 ஆம் ஆண்டு மலையாளத்தில் இயக்குனர் ஜோ பேபி இயக்கத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. நிமிஷா சஜயன், சுராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்த நிலையில், ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டால் அவர்களின் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி இப்படம் உருவாக்கப்பட்டிருக்கும்.

முக்கியமாக பெண்கள் என்றாலே கணவன், பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்களுக்கு சமைப்பது, வீடு வேலைகளை பார்த்துக்கொள்வது என கிச்சனில் தான் அவர்களது வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்கத்தை எதிர்க்கும் படமாக இப்படம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்தாண்டு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலான நிலையில், இந்தாண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது.

Also Read: முழு பூசணிக்காயை சோற்றில் போட்டு மறைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. இதெல்லாம் ஒரு பொழப்பா

இந்த படத்தின் பத்திரியாளார் சந்திப்பு சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குனர் கண்ணன்,நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். அப்போது பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், இப்படம் கட்டாயம் அனைவருக்கும் தேவைப்படும் படமாக இருக்கும் என கூறினார். மேலும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது சபரிமலை விவகாரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், எந்த கடவுள் கோவிலுக்கு பெண்கள் வரக்கூடாது என கூறியது என வினவினார். மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோவிலுக்கு போகக்கூடாது என்பதை மனிதர்கள் தான் சட்டம் இயற்றி தீர்மானித்துள்ளார். உலகில் உள்ள எந்த ஒரு கடவுளும் இப்படி ஒரு விஷயத்தை சொல்லவில்லை என தனது துணிச்சலான பதிலை தெரிவித்தார். தற்போது இவரது பேச்சு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Also Read: நயன்தாரா இடத்தை பிடிக்கப் போகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஒரே வாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் 3 படங்கள்