வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

புருஷனை காப்பாற்ற கொரில்லா தாக்குதலுக்கு ரெடியான சந்தியா.. மாடு மேயிர அளவுக்கு புல்லரிக்க வச்சிட்டீங்க!

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் தீவிரவாதிகள் மூன்று இடத்தில் வைத்த வெடிகுண்டை சந்தியா, தன்னுடைய கணவரின் உதவியுடன் ஜோதியிடம் போட்டு வாங்கி அந்த குண்டு வெடிப்பதற்கு முன்பே அவற்றை செயலிழக்கச் செய்தார்.

அதன்பின் ஜோதியை மீட்க வந்த தீவிரவாதிகள் சரவணனையும் குண்டு கட்டாயத் தூக்கி சென்று விட்டனர். தற்போது தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி இருக்கும் சரவணன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரி உள்ளிட்டோரை காப்பாற்றுவதற்காக துணிச்சலுடன் சந்தியா கிளம்பிவிட்டார்.

Also Read: நிஜ வாழ்க்கையில் உயிருக்கு போராடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்.. தனக்கு நேர்ந்தது யாருக்கும் நேரக்கூடாது!

ஏனென்றால் தீவிரவாதிகளின் பிடியில் இருப்பவர்களை காப்பாற்றுவதற்காக போலீஸ் அதிகாரிகள் கொரில்லா முறையை கையாள நினைக்கின்றனர். கொரில்லா முறை என்பது வரலாற்றில் சிவாஜி, தீரன் சின்னமலை உள்ளிட்டோர் மறைந்திருந்து எந்த வரைமுறையும் இன்றி தாக்கக்கூடிய போர்யுத்தி.

ஆனால் அதையெல்லாம் என்னவென்று தெரியாமலேயே தற்போது சீரியலில் கொரில்லா தாக்குதலை நிகழ்த்த போலீஸ் திட்டமிட்டு இருக்கிறது. இருப்பினும் அவற்றை செய்தால் தீவிரவாதிகளை தவிர மற்றவர்களும் உயிரிழக்க நேரிடும் என்று போலீஸ் தயங்குகிறது.

Also Read: 2 நாள் ஆகியும் அசீமை விடாமல் துரத்தும் நெட்டிசன்கள்.. இவ்ளோ எதிர்ப்புக்கு இப்படி செஞ்சா தப்பிச்சிங்க

இந்த ஆபரேஷனுக்கு சந்தியாவும் உடன் வருவதாக சொல்கிறார். அதை ஏற்க மறுக்கும் போலீஸ் அவரை அந்த இடத்தை விட்டு கிளம்ப சொல்கின்றனர். ஆனால் தன்னுடைய கணவர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரியை காப்பாற்ற வேண்டும் என தனி ஒரு ஆளாக கையில் துப்பாக்கியுடன் சந்தியா வீரமங்கையாக கிளம்பி இருக்கிறார்.

கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் எடுத்துக் கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் புருஷனைக் காப்பாற்றுவதற்காக கொரில்லா தாக்குதலுக்கு ரெடியான சந்தியாவை பார்க்கும்போது, மாடு மேய்க்கிற அளவுக்கு புல்லரிக்கிறது என்றும் நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.

Also Read: பிக் பாஸ் சீசன் 6 ஒட்டு மொத்த சர்ச்சைகளின் லிஸ்ட்.. ரெட் கார்ட் கொடுக்க வேண்டியவருக்கு டிராபியா.?

Trending News