திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

டிக்கெட் விற்ற லாபத்தை வைத்து 2 படத்தை எடுக்கலாம்.. இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய படம்

குறிப்பிட்டு சொல்லக்கூடிய தமிழ் படங்களுக்கு சமீபத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது அதிலும் அந்தப் படத்திற்கு தியேட்டர்களில் விற்கப்பட்ட டிக்கெட் விற்பனையை வைத்து இன்னும் இரண்டு படங்களை எடுத்து விடலாம் அந்த அளவிற்கு இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸை அந்த மூன்று படங்களும் மிரட்டி விட்டது.

அதிலும் அவதார் 2 வெளிவந்து யாரும் நினைத்து பார்க்காத அளவிற்கு வெற்றியடைந்து மிகப்பெரிய வசூலை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். முதல் பாகத்தை காடுகளில் நடப்பது போல் எடுத்திருந்த இயக்குனர், இரண்டாம் பாகத்தை நீருக்கு அடியில் நடப்பது போல் 3D அனிமேஷன் தொழில் நுட்பத்துடன் எடுத்திருந்தார்.

Also Read: வியக்க வைக்கும் அவதார் 2 வசூல் நிலவரம்.. ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலா?

அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதில் இந்தியாவில் மட்டுமே அதிக தியேட்டர்களை அதாவது ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் வைத்திருக்கும் பி வி ஆர் சினிமாஸ். அவதார் 2 படத்தை இவர்கள் இந்தியாவில் 300 தியேட்டரில் வெளியிட்டார்கள்.

அவதார் வெற்றியினால் தியேட்டர் உரிமையாளர்கள் பல கோடி லாபம் பார்த்தனர். இதில் இவர்களுக்கு வெறும் டிக்கெட் விற்ற லாபம் மட்டுமே 120 கோடி வந்திருக்கிறதாம். இதே போல் இந்த படத்தை வெளியிட்ட அனைத்து தியேட்டர்களுக்கும் லாபத்தை பெற்று தந்துள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

Also Read: 13 வருடமாக காக்க வைத்து புதிய உலகிற்கு கூட்டிச் சென்ற அவதார் 2.. எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

ஹாலிவுட் படம் ஆன இந்த படம் மட்டுமல்ல, கோலிவுட்டின் பெருமையை உலக அளவில் பறைசாற்றிய தமிழ் திரைப்படங்களான விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற இரண்டு படங்களும் திரையரங்கில் அதிக டிக்கெட் விற்கப்பட்டு லாபம் பார்த்த படங்களாகும்.

வரலாற்று கதையம் கொண்ட பொன்னின் செல்வன் படத்தை பார்ப்பதற்கு சிறுவர் முதல் பெரியவர் வரை மிகுந்த ஆர்வம் காட்டி திரையரங்கில் குவிந்தனர். அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் மிரட்டிவிட்ட விக்ரம் படமும் 500 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸை குவித்து வசூல் வேட்டையாடியது.

Also Read: அவதார்-3,4,5 பாகங்கள் வருமா, வராதா.? ஜேம்ஸ் கேமரூன் அளித்த அசர வைத்த விளக்கம்

ஆகையால் கடந்த ஆண்டு இரண்டாம் பாதியில் வெளியான அவதார் 2, விக்ரம், பொன்னியின் செல்வன் போன்ற மூன்று படங்களும் தியேட்டரில் விற்கப்பட்ட டிக்கெட் லாபம் மற்றும் பல கோடியை தாண்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News