வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பல்லு போன வயதில் பக்கோடா சாப்பிட்ட 5 பிரபலங்கள்.. 60 வயதில் முப்பதை தட்டி தூக்கிய பாலு மகேந்திரா 

சினிமா துறையை பொறுத்தவரையில் தங்களது திறமையின் மூலம் புகழின் உச்சியைத் தொட்ட இயக்குனர்கள், நடிகர்கள் தங்களின் வாழ்க்கையில் மட்டும் தோல்வியை சந்தித்துள்ளனர். இந்நிலையில் பல்லு போன வயதில் பக்கோடா சாப்பிட்ட நினைத்த 5 பிரபலங்களைப் பற்றி பார்க்கலாம்.

பிரித்திவிராஜ்: சின்னத்திரையில் கலக்கி வருபவர் நடிகர் பப்லு பிரித்விராஜ் . 1994 ஆம் ஆண்டு பீனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடுமையான மன உளைச்சல் காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து 56 வயதாகும் பப்லு ப்ரித்விராஜ் 23 வயது பெண்ணை 2 வது ஆக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் இந்த தகவல் ஆனது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

Also Read: அஜித்திற்கும் பப்லுவிற்க்கும் ஏற்பட்ட தகராறு.. பல வருடம் கழித்து வெளியான உண்மை

வேலு பிரபாகரன்: நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட சில படங்களில் இயக்கியவர் வேலு பிரபாகரன். இதனைத் தொடர்ந்து “ஒரு இயக்குனரின் காதல் டைரி” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த ஷெர்லின் தாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 60 வயதாகும் வேலு பிரபாகரன் 34 வயதான ஒரு நடிகையை திருமணம் செய்து இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியது. விமசாகர்கள் பல்லு போன வயதில் பக்கோடா தேவையா என்று கலாய்த்து வருகின்றனர்.

பிரகாஷ்ராஜ்: தென்னிந்திய சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு அந்தஸ்தை உருவாக்கியவர் பிரகாஷ்ராஜ். இவருக்கு கடந்த 1994 ஆம் ஆண்டு லலிதா குமாரி உடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர். 2019 பொன்னி வர்மா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். வயதிற்கு வந்த ஒரு மகள் இருக்கும் பொழுதே இரண்டாவது திருமணம் தேவையா என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. 

Also Read: பிரகாஷ்ராஜின் உண்மை முகம்.. 50 கோடி கொடுத்தாலும் அந்த மாதிரி நடிக்க மாட்டேன்

பாலுமகேந்திரா: தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக கொடிகட்டி பறந்தவர் தான் பாலு மகேந்திரா. சினிமாவில் பல வெற்றிகளைக் கண்டாலும் வாழ்க்கையில் பல மேடு பள்ளங்கள் நிறைந்ததாகவே அமைந்தது. இவருக்கு அகிலா, நடிகை ஷோபா மற்றும் நடிகை மௌனிகா எனும் மூன்று மனைவிகள் இருந்தனர். இதில் நடிகை ஷோபா தனது 17 வது வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரை அடுத்து அகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் பாலு மகேந்திரா மௌனிகா ஜோடி ஆனது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தின ஜோடிகளாக வலம் வந்தனர். இவரைப் பற்றி நிறைய விமர்சனங்கள் எழுந்தாலும் அதனை பற்றி கண்டுகொள்ளாமல் தனது வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்தார்.

சரத்குமார்: திரை உலகில் ஹீரோ வில்லன் என பன்முக நடிப்பு திறமையால் இன்றும் நிலைத்திருப்பவர் நடிகர் சரத்குமார். இவர் சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். இது சரத்குமாருக்கு இரண்டாவது மற்றும் ராதிகாவிற்கு மூன்றாவது திருமணம் ஆகும். இவர்களின் திருமணம் அன்றைய சமயத்தில் சமூக வலைதளங்களில் பேச்சு பொருளாகவே மாறியது.

Also Read: பாலுமகேந்திரா உட்பட 2 பெரிய ஜீனியஸ் இயக்கத்தில் நடித்த ஒரே நடிகர்.. இனிமேல் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு

Trending News