14 வயதில் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் கொஞ்சம் கூட பயம் இல்லாத தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று குணச்சித்திர நடிகையாக கலக்கி வருகிறார். இயக்குனர் கே.பாக்யராஜ் மூலம் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் தான் நடிகை ஊர்வசி.
கதாநாயகிகளுக்கு காமெடி வராது என்று இருந்த ஒரு நம்பிக்கையை உடைத்தவர் நடிகை ஊர்வசி. நடிப்பில் மிரட்டும் உலக நாயகன் கமலஹாசன் கூட நடிகை ஊர்வசியை ‘நடிப்பு ராட்சசி’ என்று சொல்லியிருக்கிறார். தன்னுடைய குழந்தைத்தனமான முகம், சிரிப்பை வரவழைக்கும் உடல் மொழி கொண்ட நடிகை ஊர்வசியை பெண் உருவம் கொண்ட ‘சார்லி சாப்ளின்’ என்று கூட சொல்லுவார்கள்.
Also Read: 40 வயதில் குழந்தை பெற்ற ஊர்வசி.. அச்சு அசல் அம்மாவை போல் இருக்கும் முதல் கணவரின் மகள்.!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இந்திய மொழிகள் அத்தனையிலும் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் நடிகை ஊர்வசி. தற்போது அம்மா கேரக்டர், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் இவர் தன்னுடைய சிறந்த நடிப்பால் முத்திரை பதித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘சூரரை போற்று’ திரைப்படத்தில் ஊர்வசியின் நடிப்பு முக்கியமானது.
சினிமாவில் இப்படி ஒரு நடிகை இருந்தார் என்றால், ஊர்வசிக்கு முன் நடிகை ஆச்சி மனோரமா தான். கதாநாயகியாக, காமெடி நாயகியாக, வில்லியாக, குணச்சித்திர கதாபாத்திரமாக நடிப்புக்கு அகராதி எழுதியவர் தான் மனோரமா. தற்போது மனோரமாவுக்கு இணையாக நடிப்பில் பட்டையை கிளப்பி வருகிறார் நடிகை ஊர்வசி.
நடிகை ஊர்வசி தன்னுடைய 700 ஆவது படமான ‘அப்பத்தா’ என்னும் படத்தில் நடித்தார். இந்த படத்தை இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கி இருக்கிறார். ஒரு வயதான பெண்ணுக்கும், நாய்குட்டிக்குமான உறவை அழகாக காட்டிய திரைப்படம் இது. தற்போது இந்த படம் ஷாங்காய் பிலிம் பெஸ்டிவலில் நாளை திரையிடப்பட இருக்கிறது.
இது நடிகை ஊர்வசிக்கு உலக அரங்கில் கிடைக்கவிருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும். தன்னுடைய 14 ஆவது வயதில் நடிப்பு என்றால் என்னவென்று தெரியாமல் உள்ளே வந்த ஊர்வசி, தற்போது சினிமாவில் மிகப்பெரிய சாதனையை செய்து இருக்கிறார். இதுபோன்ற நடிகை சினிமாவுக்கே கிடைத்த ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டம்.
Also Read: 51 வயதிலும் குடிக்கு அடிமையான நடிகை ஊர்வசி.. தினமும் குறையாத தள்ளாட்டம்