ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஊருக்கு தான் உத்தமன், பொண்ணுங்க விஷயத்துல அர்ஜுன் ரொம்ப வீக்கு.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வில்லனாக நடிக்கும் போது கூட பிரபலமாகாத பயில்வான் ரங்கநாதன், தற்போது யூட்யூப் சேனல் உருவாக்கி, அதில் சினிமா பிரபலங்கள் பலரைப் பற்றி அவதூறாக பேசுவதன் மூலம் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார்.

அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிக்கையாளராகவும் பணிபுரிந்து வருவதால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகத்திற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அதிலும் இப்போது பாடி டிமான்ட் இருக்கும் பிரபலம் ஒருவர், நடிகைகளின் அனுமதியின்றி தொட்டிருக்க முடியாது என முன்னணி நடிகருக்கு சாதகமாக பேசி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

Also Read: எத திருடனும்னு ஒரு விவஸ்தை இல்லையா.? மேடையில் விஜய்யை கிழித்த பயில்வான்

ஆக்சன் கிங் ஆக சினிமாவில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் பிரபல நடிகர் அர்ஜுன், 2018 ஆம் ஆண்டு இளம் நடிகையான ஸ்ருதி ஹரிஹரன் உடல் நிபுணன் என்ற படத்தில் இணைந்து நடித்த சமயத்தில் இவர்களுக்கிடையே எடுக்கப்பட்ட நெருக்கமான காட்சி முடிந்த பிறகும், அர்ஜுன் ஸ்ருதி ஹரிஹரனை விடாமல் அத்துமீறி இருக்காராம்.

இதனால் அர்ஜுனின் மீது வழக்கு தொடக்கப்பட்டது. அப்போது தனக்கு 5 கோடி மானநஷ்டஈடு வழங்கும்படி ஸ்ருதி ஹரிஹரன் மனுத்தாக்கல் செய்தால், இந்த வழக்கு கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக நடந்த நிலையில், அர்ஜுன் எதிராக எந்த ஆவணமும் இல்லாததால் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Also Read: சூரியவம்சம் இல்ல, சிவாஜி படத்தின் அட்ட காப்பி தான் வாரிசு.. பகிரங்கமாக போட்டு உடைத்த பயில்வான்

இந்த சூழலில் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பொதுவாக பாடி டிமான்ட் இருக்கும் அர்ஜுனுக்கு மதுப்பழக்கமும் உண்டு. ஆனால் அதை அவர் அளவோடு வைத்துக் கொள்ள காரணம், அவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நினைப்பவர். மேலும் நடிகைகளுடன் சகஜகமாக நெருங்கி பழகக் கூடிய அர்ஜுன், அவர்களது விருப்பம் இல்லாமல் அவர்கள் பக்கம் கூட நெருங்க மாட்டார். இந்த விஷயத்தில் அவர் மீது குறை சொல்ல முடியாது.

மேலும் நடிகை ரஞ்சிதா திரையுலகை விட்டு போனதற்கும் அர்ஜுனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரஞ்சிதாவிற்கும் நித்யானந்தாவிற்கும் இந்த உறவு அனைவருக்குமே தெரியும். மேலும் இதுவரை எந்த ஒரு நடிகையும் அர்ஜுனன் மீது எந்த ஒரு புகாரையும் கூறவில்லை. இந்நிலையில் அர்ஜுனை குறித்த ஸ்ருதி ஹரிஹரன் தவறாக கூறியது முழுக்க முழுக்க பொய்யானது என்றும் ரங்கநாதன் அர்ஜுனுக்கு சாதகமாக பேசி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

Also Read: வாரிசு, துணிவு படங்கள் எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் விமர்சனம் கூறிய பயில்வான்

Trending News