புதன்கிழமை, நவம்பர் 27, 2024

2 திரை, 2 கதையுடன் வெளிவந்த பிகினிங்.. தமிழ் சினிமாவின் புது முயற்சி எப்படி இருக்கு.? ஒரு விமர்சனம்

வித்தியாசமான கதைகளை பிறர் வியக்கும் வண்ணம் கொடுப்பதில் தமிழ் சினிமாவுக்கு நிகர் வேறில்லை. அப்படி புது முயற்சியுடன் வெளிவந்த பல திரைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் ஆசியாவின் முதல் ஸ்பிளிட் ஸ்கிரீன் திரைப்படம் என்ற பெருமையுடன் வெளிவந்திருக்கும் படம் தான் பிகினிங்.

ஜெகன் விஜயா இயக்கத்தில் வினோத் கிஷன், கௌரி ஜி கிஷன், சச்சின், ரோகிணி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்துள்ள இந்த திரைப்படம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இப்படத்தின் விமர்சனத்தை பார்ப்பதற்கு முன் ஸ்பிளிட் ஸ்க்ரீன் என்றால் என்ன என்று பார்த்து விடுவோம். அதாவது திரையின் வலது பக்கம் ஒரு காட்சியும் இடது பக்கம் ஒரு காட்சியும் ஒளிபரப்பாகும்.

Also read: முதல் நாளே 100 கோடி வசூல் செய்த 7 படங்கள்.. ஷாருக்கானுக்கு முன்பே சாதித்த நம்ம சூப்பர் ஸ்டார்

இப்படி ஒரு முயற்சியில் வெளிவந்துள்ள இந்த பிகினிங் ரசிகர்களை எந்த அளவுக்கு கவர்ந்துள்ளது என்பதை இங்கு காண்போம். கதைப்படி திரையின் ஒரு பக்கத்தில் மனவளர்ச்சி குன்றிய நபரான வினோத் தன் அம்மா ரோகிணியுடன் வாழ்ந்து வருகிறார். மகனுக்காகவே வாழும் ரோகிணி வேலைக்கு செல்வதற்கு முன்பு அவரை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு செல்கிறார்.

இந்த கதை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மற்றொரு புறத்தில் கௌரி, சச்சின் மற்றும் அவரின் நண்பர்களால் கடத்தப்பட்டு ஒரு வீட்டில் அடைக்கப்படுகிறார். அங்கிருந்து வெளியேற துடிக்கும் அவருக்கு ஒரு பட்டன் போன் கிடைக்கிறது. ஆனால் அதில் சில பட்டன்கள் வேலை செய்யாததால் அவரால் போலீசை தொடர்பு கொள்ள முடியவில்லை.

Also read: பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை வாங்கி குவித்த பிரபலங்கள்.. ஆஸ்கரைத் தொடர்ந்து மாஸ் காட்டும் ஆர்ஆர்ஆர்

அதனால் ஏதோ ஒரு நம்பரை அழுத்தி அந்த நபரிடம் உதவி கேட்கிறார். ஆனால் அந்த போன் காலை அட்டென்ட் செய்யும் வினோத்துக்கு கௌரி என்ன சொல்ல வருகிறார் என்பதே புரியவில்லை. இருந்தாலும் வேறு வழி இல்லாததால் கௌரி வினோத்துக்கு தன்னுடைய நிலைமையை புரிய வைக்க முயற்சி செய்கிறார். இப்படி இரு வேறு இடங்களில் வீட்டுக்குள் பூட்டப்பட்டிருக்கும் இந்த கதாபாத்திரங்கள் எப்படி ஒன்றாக பயணிக்கிறது என்பதுதான் இந்த கதை.

பல திரைப்படங்களில் வில்லனாக நாம் பார்த்து வந்த வினோத் இந்த படத்தில் தன்னுடைய வித்தியாசமான உடல் மொழியால் அனைவரையும் கவர்ந்து விடுகிறார். அவரைப்போலவே கௌரியும் முதல் பாதி முழுவதும் அதிக ஸ்கோர் செய்கிறார். அதற்கு அடுத்தபடியாக வில்லனாக வரும் சச்சினும் பல இடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் இரண்டாம் பாதியில் கதையின் ஓட்டம் சற்று தொய்வை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அதையெல்லாம் சரி செய்யும் வகையில் இருக்கும் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. மேலும் இப்படி ஒரு முயற்ச்சியை சரியாக கொண்டு வந்துள்ள இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். அதனாலேயே இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த பிகினிங் தரமான முயற்சி.

Also read: போற உசுரு போராடி போகட்டும்.. ஆஸ்கர் லெவல் நடிப்பில் பின்னி பெடல் எடுக்கும் யோகி பாபுவின் பொம்மை நாயகி ட்ரெய்லர்

- Advertisement -spot_img

Trending News