வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஒரு வாரம் கழித்து கொந்தளித்த அசீம்.. நெகட்டிவ் விமர்சனங்களுக்கு கொடுத்த பதிலடி

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்து அதில் டைட்டில் வின்னர் ஆக யாரும் எதிர்பாராத அசீம் தேர்வானது. தற்போது வரை சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்புடன் பேசப்படுகிறது. அசீம்மின் வெற்றி பிக் பாஸ் ரசிகர்கள் மட்டுமல்ல அவருடன் பிக் பாஸ் வீட்டில் இருந்த 20 போட்டியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

ஏனென்றால் கிராண்ட் ஃபினாலே மேடை வரை வந்த சிவின் மற்றும் விக்ரமன் இருவரும் ஒருவருக்குத்தான் வெற்றியாளராக தேர்வாகி இருக்கணும். ஆனால் அசீம் டைட்டில் வின்னர் ஆனது சோசியல் மீடியாவில் ஒரு பனிப்போரே நடந்தது.

Also Read: பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் ராதிகா.. மோசமான வில்லியை தரையிறக்கும் முடிவில் விஜய் டிவி

அதிலும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாள் முதல் போட்டியாளர்களை மரியாதையுடன் நடத்தியது மட்டுமல்லாமல் கண்ணியம் குறையாமல் வீட்டில் நியாயத்தை மட்டுமே பேசிய விக்ரமன் வெற்றியடைய வேண்டும் என ‘எண்ணிய அறம் வெல்லும்’ என்ற ஹேஸ் டேக்கை ட்ரெண்ட் செய்கின்றனர்.

அதேபோல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களும் அசீம் குறித்து நெகட்டிவ் விமர்சனங்களை சோசியல் மீடியாவில் தெரிவிப்பதால், அதையெல்லாம் பார்த்து தற்போது கொந்தளித்துள்ளார். டைட்டில் வின்னரான ஒரு வாரம் கழித்து அசீம் கோபப்படுவதற்கு காரணம், தனக்கு கிடைத்த வெற்றியை யாரும் தங்களுடைய வெற்றியாக பார்க்கவில்லை என்ற ஆதங்கம் தான்.

Also Read: டைட்டில் வின்னர் பட்டம் அவருக்கு தகுதியே கிடையாது.. முதல் முறையாக ஓப்பனாக பேசிய விக்ரமன்

அதேசமயம் என்னை ஜெயிக்க வைத்த மக்களுக்கு எப்போதுமே உண்மையாக இருப்பேன். சிலர் தோல்வியை தாங்க முடியாமல் பேசுவதை பொருட்படுத்த மாட்டேன். அதே போல் தன் மீது சுமத்தப்படும் விமர்சனங்கள் வெறும் சொற்கள் தானே தவிர, என்னை தாக்க வந்த கற்கள் அல்ல.

அந்தக் கற்களை எல்லாம் படிக்கற்களாக பயன்படுத்தி என்னுடைய இலக்கை அடைவேன். நான் செய்யப் போகும் எல்லா நற் செயல்களுக்கும் காரணமான அனைவருக்கும் நன்றி என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசீம் பொங்கி எழுந்துள்ளார்.

Also Read: விஜய் டிவி பிரபல டான்ஸ் மாஸ்டர் தற்கொலை.. பிறந்தநாளில் எடுத்த விபரீத முடிவு.!

வழக்கமாக பக்கம் பக்கமாக பேசும் அசீம் ட்ராபி கைக்கு வந்து வெற்றி கொண்டாட்டத்தில் இருந்த நிலையில், தற்போது தான் சோசியல் மீடியா பக்கம் போய் இருப்பார் போல தெரிகிறது. அங்கு பார்த்தால் அவருக்கு எதிராக சகப் போட்டியாளர்கள் மட்டுமல்ல நெட்டிசன்களும் விளாசிய நெகட்டிவ் விமர்சனங்களுக்கு தற்போது பதில் கொடுத்திருக்கிறார்.

Trending News