வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

விஜய் டிவி பிரபலம் தாடி பாலாஜியின் மனைவி கைது.. அம்பலமான சிசிடிவி ஆதாரம்

சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் குணச்சித்திர வேடங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் தோன்றிய நடிகர் தாடி பாலாஜி, சின்னத்திரையில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். அதிலும் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய மனைவியுடன் கலந்து கொண்ட தாடி பாலாஜி, அதன் பின் கலக்கப்போவது யாரு போன்ற ஒரு சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றார்.

சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் பணி புரிந்தார். இப்படி சின்னத்திரையில் பாப்புலரான இவர், குடும்ப பிரச்சினையின் காரணமாக இவருடைய மனைவி நித்யாவுடன் பிரிந்து வாழ்ந்து வந்தார். அதிலும் பாலாஜிக்கு போதை பழக்கம் அதிகம் இருப்பதால், தன்னையும் தன்னுடைய குழந்தையையும் குடித்துவிட்டு மோசமாக நடத்துகிறார் என்றும் நித்யா சமீபத்தில் குற்றம் சாட்டினார்.

Also Read: ஒரு வாரம் கழித்து கொந்தளித்த அசீம்.. நெகட்டிவ் விமர்சனங்களுக்கு கொடுத்த பதிலடி

அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருவர் இருவரும் கலந்து கொண்டு, அதன்பின் சேர்ந்து வாழ்வார்கள் என நினைத்த நிலையில், மகளை வைத்த மனைவி தன்னிடம் பணம் பறிப்பதாக தாடி பாலாஜி குற்றம் சாட்டினார். இதனால் இவர்களுக்கு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

இந்த சூழ்நிலையில் தாடி பாலாஜிவின் மனைவி சென்னையை அடுத்த மாதவரத்தில் தனது மகளுடன் வசித்து வருகிறார். இவரின் எதிர் வீட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில், நேற்று நித்யா தன்னுடைய எதிர் வீட்டாரின் காரை கல் வீசி சேதப்படுத்தி இருக்கும் சிசிடிவி காட்சி இப்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

Also Read: விஜய் டிவி பிரபல டான்ஸ் மாஸ்டர் தற்கொலை.. பிறந்தநாளில் எடுத்த விபரீத முடிவு.!

இந்த சிசிடிவி ஆதாரத்தை வைத்து மாதவரம் காவல் நிலையத்தில் நித்யாவிற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதை அடுத்து போலீசார் பிறர் சொத்தை சேதப்படுத்திய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளது. பின்னர் நித்யா ஜாமினில் வெளிவந்த நிலையில், இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே நித்யா கொஞ்சம் அடாவடியாக தான் நடந்து கொண்டார். இருந்தாலும் பிறருடைய உடைமைகளை சேதப்படுத்தி அதன்மூலம் சந்தோஷப்படுவது மட்டமான செயல் என சோசியல் மீடியாவில் நித்யாவின் செயலுக்கு நெட்டிசன்கள் விலாசுகின்றனர்.

Also Read: மிக மட்டமான முன் உதாரணம்.. விஜய் டிவியை விளாசிய சீசன் 6 நடிகை

Trending News