துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட இருந்த சமயத்தில் திடீரென்று அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து தூக்கப்பட்டதாக அதிர்ச்சியான தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.
ஏனென்றால் விக்னேஷ் சிவன் தயார் செய்து வைத்திருந்த கதை அஜித்துக்கும் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்திற்கும் பிடிக்காத காரணத்தால் அவரை கழட்டி விட்டுள்ளனர். ஆனால் அதையும் மீறி விக்னேஷ் சிவன் லண்டன் வரை சென்று தயாரிப்பாளரிடம் இதே கதையை கூறியுள்ளார்.
உடனே லைக்கா தயாரிப்பு நிறுவனம் இந்த கதையைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து, 8 மாதம் உங்களுக்கு காலவகாசம் கொடுத்து கதையை ரெடி பண்ண சொன்னால் இப்படி ஒரு குப்பை கதையை எடுத்து வந்துள்ளீர்களே என்று கூறியுள்ளார்கள். தற்போது விக்னேஷ் சிவனுக்கு பதிலாக ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குவதாக நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியானது.
இருப்பினும் வாய்ப்பு கொடுத்து மோசம் செய்த லைக்கா நிறுவனத்தின் மீது விக்னேஷ் சிவன் பெரும் அதிருப்தியில் இருக்கிறார். இது விக்னேஷ் சிவனுக்கு புதிதல்லையாம். நான்கு வருடங்களுக்கு முன்பே லைக்கா இதே போன்ற வேலையை பார்த்திருக்கிறது.
Also Read: அஜித் வெறுத்து ஒதுக்கிய பின் கேரியரை இழந்த 5 இயக்குனர்கள்.. விக்னேஷ் சிவன் கதி அதோ கதி தான் போல
தற்போது ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவரை கழட்டி விட்டது போல் 2019 ஆம் ஆண்டில் விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா கைவிரித்துள்ளது.
அதேபோன்று இப்போது மறுபடியும் ஏகே 62 படத்திலும் இரண்டாவது முறையாக லைக்கா தன்னுடைய வேலையை காட்டி இருப்பது குறித்து விக்னேஷ் சிவன் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் பிறகு விக்னேஷ் சிவன் நிச்சயம் அடுத்த ஒரு பெரிய ஹீரோவின் படத்தை இயக்குவது கேள்விக்குறியாக மாறிவிடுமோ என்பது அவருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.