வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

காந்தாரா படத்தையும் விட்டு வைக்காத விஜய் டிவி.. இதெல்லாம் ஒரு பொழப்பு, ராஜா ராணி 2 வில் நடக்கும் அட்டூழியம்

சின்னத்திரை தொடர்கள் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் பிரதிபலிப்பாக தான் ஒரு கட்டத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. அதாவது மாமியார் மருமகள் சண்டை, குடும்பப் பிரச்சினை இது போன்ற கதை அம்சங்களில் தான் தொடர்கள் ஒளிபரப்பானது. ஆனால் இப்போது வெள்ளித்திரையில் உள்ள படங்களை அப்படியே சீரியல் இயக்குனர்கள் காப்பியடித்து வருகிறார்கள்.

அதிலும் விஜய் டிவி இயக்குனர்களை தான் இந்த பெருமை சேரும். அதாவது பாரதி கண்ணம்மா தொடரில் பல்வேறு படங்களில் உள்ள காட்சியைப் போட்டு பல வருடங்களாக இயக்குனர் உருட்டி வருகிறார். இப்போதுதான் அது இறுதி அத்தியாயத்தையே எட்டி உள்ளது.

Also Read : விஜய் டிவி பிரபலம் தாடி பாலாஜியின் மனைவி கைது.. அம்பலமான சிசிடிவி ஆதாரம்

இப்போது விஜய் டிவியில் பிரபல தொடரான ராஜா ராணி 2 வில் கதாநாயகி சந்தியா ஐபிஎஸ் ட்ரைனிங்காக சென்றுள்ளார். அங்கு அவர் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் ஜெய்ஹிந்த் படத்தில் இடம்பெற்ற காட்சியை அப்படியே காப்பி அடித்து ராஜா ராணி 2 தொடரில் ஒளிபரப்பு செய்திருந்தார்கள்.

இந்நிலையில் இப்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து வருகிறார்கள். அதாவது சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற காந்தாரா படத்தை அச்சு பிசகாமல் காப்பியடித்துள்ளார்கள். அதாவது சந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் இருந்து காப்பாற்ற சரவணன் கடவுளாக உருவெடுத்துள்ளார்.

Also Read : டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் பிரபல சேனல்.. புதிய சீரியல்களை தரையிறக்கியதால் திண்டாடும் விஜய் டிவி  

இது நடைமுறைக்கு புறம்பாக இருந்தாலும் சினிமாவில் ரசிகர்கள் ஓரளவு ஏற்று கொள்கிறார்கள். ஆனால் சீரியலில் கற்பனைக்கும் அப்பாற்பட்ட இது போன்ற விஷயங்களை பார்த்தால் ரசிகர்களுக்கு சிரிப்பு தான் வருகிறது. இப்போது இந்த புரோமோவை பார்த்த ரசிகர்கள் லோ பட்ஜெட் காந்தாரா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் சீரியல் இயக்குனர்கள் சொந்தமாக யோசிக்கும் திறமை இல்லாமல் இவ்வாறு படத்தில் இருந்து காட்சிகளை காப்பியடித்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொள்கிறார்கள். இப்படி என்னதான் கழுவி ஊற்றினாலும் விஜய் டிவி இயக்குனர்கள் அடுத்தடுத்தும் இதே போன்று ஏதாவது படத்தில் இருந்து காட்சிகளை திருடி வருகிறார்கள்.

kanthara-raja-rani-2

Also Read : மக்களை அடுத்தடுத்து முட்டாளாக்கும் விஜய் டிவி.. லாஜிக் இல்லாமல் அட்டூழியம் செய்யும் ராஜா ராணி சீரியல்

Trending News