திங்கட்கிழமை, நவம்பர் 11, 2024

இளம் வயதில் இறந்து போன 5 துணை கதாபாத்திரங்கள்.. டிஸ்கோ சாந்தி கணவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

பொதுவாக சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் எந்த அளவுக்கு ரசிகர்களை கவர்கிறதோ அதே போன்று சில துணை கதாபாத்திரங்களும் ஆடியன்ஸை கவரும் வகையில் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் வருடங்கள் கடந்தாலும் சில துணை கதாபாத்திரங்கள் ரசிகர்களின் நினைவில் நீங்காமல் இருக்கும். அந்த வகையில் இளம் வயதிலேயே இறந்து போன சில துணை கதாபாத்திரங்கள் பற்றி இங்கு காண்போம்.

ட்ரவுசர் பாண்டி: விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் தான் துள்ளாத மனமும் துள்ளும் அந்த படத்தில் ட்ரவுசர் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் பாரி வெங்கட். இதற்கு முன்பு அவர் நிறைய நாடகங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் தான் அவரை அடையாளப்படுத்தியது.

அதன் பிறகு அவருடைய ஒரிஜினல் பெயரே மறந்து போகும் அளவுக்கு அவர் ட்ரவுசர் பாண்டி என்று அழைக்கப்பட்டார். ஆனால் விதியின் கொடுமை அவர் ஒரு விபத்தில் சிக்கி இளம் வயதிலேயே மரணம் அடைந்தார். இது திரைத்துறைக்கு ஏற்பட்ட பெரிய இழப்பாக இன்று வரை பார்க்கப்படுகிறது.

Also read: தீபாவளியில் மோதிக் கொள்ளும் டாப் 3 நடிகர்கள்.. சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக வரும் பெரும் புள்ளி

முத்துராஜ்: களவாணி திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை கொடுத்த திரைப்படம் தான் சித்திரம் பேசுதடி. அப்படத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட வால மீனுக்கும் விலாங்குமீனுக்கும் பாடலில் இவர் நடித்திருப்பார். அதாவது அந்தப் பாடலில் கானா உலகநாதனுக்கு மைக் பிடிப்பவராக இவர் வருவார். அதை தொடர்ந்து அவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி இருந்த சமயத்தில் தான் அவர் உயிர் நீத்தார்.

தேனி அருகில் வசித்து வந்த இவர் தன் வீட்டு மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது எதிர்பாராத விதமாக அதில் தவறி விழுந்தார். அதன் பிறகு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர் இரண்டு நாட்கள் கோமாவில் இருந்து பிறகு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இது திரையுலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு சம்பவமாக இருக்கிறது.

நிதிஷ் வீரா: பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவருக்கு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் நல்ல அடையாளத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து தனுஷின் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படமும் இவரை மக்கள் முன் கொண்டு சேர்த்தது. இவ்வாறு தனக்கென ஒரு இடத்தை பிடித்து வளர்ந்து வந்த இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்தார்.

Also read: வித்தியாசமான கதைகளத்துடன் கார்த்திக் சுப்புராஜின் 5 படங்கள்.. முதல் படத்திலேயே பயமுறுத்தி வெற்றி கண்ட ஜாம்பவான்

ஹரி வைரவன்: வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் விஷ்ணு விஷாலின் நண்பராக இவர் நடித்திருப்பார். அதை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்தார். இப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் சிறுநீரக செயலிழப்பு பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

இது குறித்து அவருடைய மனைவி ஒரு பேட்டியில் கூட தெரிவித்து உதவி கோரினார். ஆனாலும் அவர் சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இது திரையுலகில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. யாராவது அவருக்கு உதவி செய்திருந்தால் நிச்சயம் உயிர் பிழைத்திருப்பார் என்ற விமர்சனங்களும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ ஹரி: பல திரைப்படங்களில் வில்லன், குணச்சித்திரம் போன்ற கேரக்டர்களில் நடித்து வந்த இவர் விஜய்யின் வேட்டைக்காரன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார். ஏராளமான தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் நடிகை டிஸ்கோ சாந்தியின் கணவர் ஆவார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு ஷூட்டிங்கில் பங்கேற்ற இவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also read: பவுன்சர்களுக்கு பல லட்சம் கொட்டிக் கொடுக்கும் 6 நடிகர்கள்.. 17 லட்சம் கொடுக்கும் புலி நடிகர்

- Advertisement -spot_img

Trending News