சின்னத்திரையில் பிரபலமான ஒரு ரியாலிட்டி ஷோ மூலம் சினிமாத்துறைக்குள் காலடி வைத்தவர் தான் அந்த நடிகை. முதல் படத்திலேயே யாருக்கும் கிடைத்திராத ஒரு வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதாவது உச்ச நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இந்த நடிகைக்கு அமைந்தது.
அதனாலேயே அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளும் சரசரவென குவிந்தது. இவ்வாறு சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்த இவர் அதன் பிறகு கவர்ச்சி, குணச்சித்திரம் போன்ற கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த பொழுது அந்த படத்தின் இயக்குநரை தீவிரமாக காதலித்திருக்கிறார்.
இந்த காதல் திருமண நிச்சயதார்த்தம் வரை கூட சென்றது. ஆனால் அதன் பிறகு நடிகையை பற்றி முழுவதுமாக தெரிந்த அந்த இயக்குனர் திருமணத்தையே கேன்சல் செய்து இருக்கிறார். அதாவது நடிகை நடிக்க வந்த சமயத்தில் வாய்ப்புக்காக பல பேருடன் அந்தரங்க தொடர்பில் இருந்திருக்கிறார். இதையெல்லாம் கேள்விப்பட்ட நடிகையின் காதலர் வெறுத்துப் போய் திருமணத்தை நிறுத்தி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் நடிகைக்காக செலவு செய்த பணத்தைக் கேட்டு நீதிமன்றம் வரை சென்றார். இப்படி பல பிரச்சனைகளில் சிக்கிய அந்த நடிகை சக நடிகையின் அறிவுரையை கேட்டு சினிமாவிலிருந்து விலகினார். அதன் பிறகு அந்த நடிகை ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
தற்போது அவர் யார் கண்ணிலும் படாமல் வெளிநாட்டில் தன் வாழ்க்கையை நடத்தி வருகிறார். ஆனாலும் இந்த நடிகையால் ஏமாற்றப்பட்ட அந்த இயக்குனர் இவர் மீது தீராத கோபத்தில் தான் இருக்கிறாராம். அந்த அளவுக்கு நடிகை அவரிடம் காதல் என்ற பெயரில் பல லட்சத்தை கறந்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.