வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அட்லீயை பல கோடி கொடுத்து தூக்க ரெடியான 3 தயாரிப்பாளர்கள்.. இவர அடிச்சா அவர் தானா வருவாரு என்ற நம்பிக்கையாம்

டாப் இயக்குனர்களில் ஒருவராக இருக்கக் கூடியவர் அட்லி. தமிழில் இவர் இயக்கிய 4 படங்களுமே சூப்பர் ஹிட் அடித்த நிலையில் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியுள்ளார். அந்தப்படம் ஒருவழியாக பல பிரச்சனைகளை கடந்து இந்த ஆண்டு வெளிவர இருக்கிறது. 

தற்பொழுது ஷாருக்கானின் ஜவான் படத்தை முடித்த கையோடு அட்லி மீண்டும் கோலிவுட்டில் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கக்கூடிய தளபதி விஜய் உடன் இயக்குனர் அட்லி கூட்டணி போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. 

Also Read: பிரம்மாண்டமாக நடந்த தளபதி 67 பூஜை.. சில நிமிடங்களிலேயே லட்சத்தைக் கடந்த வைரல் வீடியோ

இதனைத் தொடர்ந்து விஜயின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் கேங்ஸ்டர் ஆக நடிக்க உள்ளார். பிரம்மாண்டமாக  உருவாக உள்ள இப்படத்தில் நடிக்கக்கூடிய நடிகர், நடிகர்களின் பட்டியலானது தற்பொழுது வெளியாகி உள்ளது. இதில் குழந்தை நட்சத்திரம் ஒருவரும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் விஜய் அடுத்ததாக இயக்குனர் அட்லியுடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்ற தகவல் தற்பொழுது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இவரது இயக்கத்தில் வெளியான தெறி, மெர்சல், பிகில் என பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த கூட்டணி மீண்டும் விஜய் நடிக்கும் 68 வது படத்தில் இணைந்துள்ளது. 

Also Read: வசூல் மன்னனை பின்னுக்கு தள்ளிய ஏகே.. தளபதி 67, ஏகே 62 படங்களில் அஜித், விஜய்யின் சம்பளம்

மேலும் அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள இப்படத்திற்கு 450 கோடி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி 68 படத்தை தயாரிக்க உள்ளது. இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் மற்றும் பிகில் படங்களை எடுத்த நிறுவனங்களின் தயாரிப்பாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய மாஸ்டர் பிளான் போட்டுள்ளனர். 

இதை அடுத்து விஜய் அடுத்ததாக நடிக்கும் 68வது படத்தின் தயாரிப்பாளர்களாக நாங்கள் தான் இருக்க வேண்டும் என அட்லியுடன் மல்லு கட்டி வருகின்றனர். இதனால் 3 தயாரிப்பாளர்களும் அட்லிக்கு  கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்து தங்கள் பக்கம் இழுப்பதற்கு வலை விரித்துள்ளனர். ஆனால் விஜய் இவர்களது தயாரிப்பில்  நடித்துக் கொடுப்பாரா என்று கேள்விக்குறியாக தான் உள்ளது. இந்நிலையில்  இவர்களுக்குள்ளே இப்படி மல்லு கட்டிக் கொள்வது சிரிப்பாக தான் உள்ளது என்று விமர்சகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Also Read: ஆடியோ உரிமம் மட்டும் இத்தனை கோடி பிசினஸா.? தளபதி 67 இப்பவே கண்ண கட்டுதே

Trending News