வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 6 சீரியல்கள்.. இணையத்தை தெறிக்க விடும் லிஸ்ட் இதோ.!

சின்னத்திரையின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கும் சீரியல்களில் எந்த சீரியல் மக்கள் மத்தியில் உச்சம் தொட்டு இருக்கிறது என்பதை, அந்த வர டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும். அதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் ஆனது தற்பொழுது வெளியாகி இணையத்தில் வெளியாகி தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது.

இதில் 10-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும், 9-வது இடத்தில் பாரதி கண்ணம்மா சீரியலும், 8-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும், 7-வது இடத்தில் ஆனந்த ராகம் சீரியலும் இடம்பிடித்துள்ளது.

இனியா: இந்த சீரியல் ஆனது அக்கா தங்கை பாச பிணைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது. அந்த வகையில் எப்படியாவது தனது அக்காவின் திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் இனியா. ஆனால் இவர்களுக்கு எதிராக விக்ரமின் அப்பாவும் அத்தையும் சதி செய்து வருகின்றனர். இவர்கள் செய்கின்ற சதியை இனியா எப்படி முறியடிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இனியா சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 6-வது இடத்தை பிடித்துள்ளது. 

Also Read: ஓவர் குடி, குக் வித் கோமாளி அரங்கில் மட்டையான போட்டியாளர்.. உடனே தூக்கிட்டு விஜய் டிவி பிரபலத்திற்கு வாய்ப்பு

எதிர்நீச்சல்: இந்த சீரியலில் பாரம்பரியத்தை கடைபிடிக்கக்கூடிய குணசேகரன் குடும்பத்தில் காதல் என்னும் கறை படிந்துள்ளது. அதுவும் இவர்களின் எதிரி ஆன எஸ்.கே.ஆர் இன் குடும்பத்தின் மூலம் பிரச்சனை வெடித்துள்ளது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத குணசேகரன் இன்னும் என்னவெல்லாம் சதி திட்டம் தீட்ட போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எதிர்நீச்சல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

கண்ணான கண்ணே: இந்த சீரியலில் மேனகா எப்படியாவது தனது பரம எதிரியான கௌதம் குடும்பத்தை அழித்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். கௌதம் உருவாக்கிய கௌசல்யா குரூப்ஸ் ஆப் கம்பெனியை எப்படியாவது அளித்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் பல சதி வேலைகளை செய்துள்ளார். ஆனால் சந்தோஷ் மேனகாவின் செயல்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார். மேனகா எல்லா தடைகளையும் தாண்டி எவ்வாறு தனது சதி திட்டத்தை நிறைவேற்றப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கண்ணான கண்ணே சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 4-வது இடத்தில் உள்ளது.

சுந்தரி: இந்த சீரியலில் கார்த்திக் அனுவின் விவகாரம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்த நிலையில் அனைவரும் உச்சகட்ட கோபத்தில் உள்ளனர். ஆனால் முருகன் அவர்களுக்கும் அனுவிற்கு மட்டும் உண்மை தெரியாத நிலையில் கார்த்திக் சுமூகமாக அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்துக் கொண்டிருக்கிறார். தற்பொழுது அணுவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றையெல்லாம் கார்த்திக் எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சுந்தரி சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

Also Read: காயத்ரி ரகுராம் இடத்தை பிடிக்க வரும் பிக் பாஸ் பிரபலம்.. தன்மானத்தை காப்பாற்ற இப்படியும் உருட்டலாமா?

கயல்: இந்த சீரியலில் ஒரு பெண்ணாக இருந்து சமூகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சமாளித்து எவ்வாறு வெற்றி பெறுகிறார் என்பதை மையமாக கொண்ட அமைந்துள்ளது. கயல் தனது அம்மாவின் மருத்துவ செலவிற்கு தேவையானவற்றை பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு நிறைவேற்றியுள்ளார். இந்நிலையில் பெரியப்பாவின் சூழ்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இவரின் சூழ்ச்சியிலிருந்து எப்படி சமாளித்த மீண்டு வர போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கயல் சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 2-வது இடத்தில் உள்ளது.

வானத்தைப்போல: இந்த சீரியலில் பொன்னி தனது காதலனான சரவணனை கரம் பிடிக்க செய்த செயலால் குடும்பமே விபரீதத்தை சந்தித்துள்ளது. இவற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கோமதி அம்மாவின் திட்டத்தை துளசியும்,  சின்ராசையும் தவிடு பொடி ஆக்கி உள்ளனர். அடுத்து என்னவெல்லாம் சம்பவம் நடக்கப் போகிறது என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும். வானத்தைப்போல சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

Also Read: சூழ்நிலை கைதியான எழில்.. பாக்கியலட்சுமி சீரியலில் ஏற்பட்ட அதிரடி ட்விஸ்ட்

இவ்வாறு இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 6 இடங்களையும் ஒரே சேனல் ஆக்கிரமித்துள்ளது. விஜய் டிவியை நிரந்தரமாக பின்னுக்கு தள்ளியுள்ள நிலையில் சன் டிவி சீரியல்கள் முன்னிலை வகிக்கிறது. இதில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த கயல் சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டு வானத்தைப்போல சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News