அஜித்தின் ஏகே 62 படத்தை யார் இயக்கிகிறார் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. ஏனென்றால் விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்கவில்லை என்பது தற்போது உறுதியாகிவிட்டது. ஆகையால் லைக்கா விஜய்யின் லியோ படத்திற்கு போட்டியாக தரமான படத்தை கொடுக்க வேண்டும் என்று இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தனர்.
அந்த வகையில் விஷ்ணுவர்தன் மற்றும் மகிழ்திருமேனி ஆகியோரின் பெயர் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வந்தது. மேலும் லைக்கா உடன் பலகட்ட பேச்சு வார்த்தைக்கு பின்பு நேற்று லண்டனில் இருந்து திரும்பிய விக்னேஷ் சிவன் முதலாவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஏகே 62 பெயரை நீக்கினார்.
Also Read: போனது போச்சுன்னு தாஜா பண்ணிய விக்னேஷ் சிவன்.. சோலி மொத்தத்தையும் இழுத்து மூடுன லைக்கா
இதைத்தொடர்ந்து லைக்கா நிறுவனம் ஏகே 62 படத்தின் இயக்குனரை அறிவிக்க இருக்கிறது. அதாவது தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் போன்ற படங்களை இயக்கிய மகழ்திருமேனி ஏகே 62 படத்தை இயக்க போகிறார் கிட்டத்தட்ட 100% உறுதியாகியுள்ளது.
தற்போது லண்டன் சென்றுள்ள மகிழ்திருமேனி லைக்கா நிறுவனத்திடம் இறுதிகட்ட ஸ்கிரிப்ட் பற்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். மேலும் கடைசியில் சுமூக முடிவு ஏற்பட்டதால் 50 லட்சம் அட்வான்ஸ் தொகையை லைக்கா நிறுவனம் மகிழ்திருமேனிக்கு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read: நயன்தாரா கெஞ்சியும் மதிக்காத லைக்கா.. சினிமா வளர்ச்சியில் ஏற்படும் சரிவுக்கு விழும் முதலடி.!
மகிழ்திருமேனி அருண் விஜய்க்கு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த நிலையில் அஜித்துக்கு நல்ல கதையை ரெடி செய்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுமட்டுமின்றி ஏற்கனவே விஜய்க்கு மகிழ்திருமேனி ஒரு கதையை கூறியுள்ளார். அந்தக் கதையில் தான் தற்போது அஜித் நடிக்கிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மேலும் மகிழ்திருமேனியின் படங்களில் அருண் ராஜா இசையமைத்து வந்த நிலையில் ஏகே 62 படத்தில் சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளார். சமீபகாலமாக இவருடைய பாடல்களை ரசிகர்கள் கொண்டாடி வருவதால் முதல்முறையாக அஜித் படத்திற்கு இசையமைக்க உள்ளார். ஆகையால் இந்த காம்போவில் ஏகே 62 படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
Also Read: லண்டன் வரை சென்று அவமானப்பட்ட விக்னேஷ் சிவன்.. லைக்கா அஜித் கூட்டணி முறிவுக்கு இதுதான் காரணம்