வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

தோனி வேற கிரகத்துல பிறக்க வேண்டியவர்.. ஆச்சரியத்தை ஏற்படுத்திய கிரிக்கெட் பிரபலத்தின் பேட்டி

என்னதான் இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கியாக இருந்தாலும், கிரிக்கெட் விளையாட்டு தான் தெருவுக்கு தெரு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடப்படும் விளையாட்டாக உள்ளது. ரேடியோ பெட்டியில் கிரிக்கெட் கேட்ட காலத்திலிருந்து இன்று நேரடியாக பார்க்கும் காலம் வரை கிரிக்கெட் ஒவ்வொரு இந்திய மக்களுக்கும் ரத்தத்துடன் கலந்துளைத்து. அந்த கிரிக்கெட் விளையாட்டை விளையாடும் வீரர்களும் தன் வாழ்வையே கிரிக்கெட்டுக்காகவும், ரசிகர்களுக்காகவும் அர்ப்பணித்து விடுவர்.

அப்படி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பல சாதனைகளை புரிந்து உலக அளவில் கேப்டன் கூலாக வலம் வந்தவர் தான் மகேந்திர சிங் தோனி. சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து இன்று உலகம் முழுதும் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் நெஞ்சில் குடிக்கொண்டிருக்கும் தோனியை பற்றி பெருமையாக பேசாதோர் கிடையாது. இவரது ஹெலிகாப்டர் ஷாட் முதல் இவர் சக மனிதர்களுடன் பழகும் விதம் உள்ளிட்ட அனைத்தும் ரசிகர்களை ஈர்க்கும்.

Also Read: சூப்பர்ஸ்டார் உயிரையே காப்பாற்றி, தோனி வரை தட்டி தூக்கிய பிரபலம்.. வெளியான பகீர் தகவல்

அந்த வகையில் தோனி ஒரு வேற்றுகிரகவாசி என கிரிக்கெட் வரண்ணையாளர் ஒருவர் குறிப்பிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1991 ஆம் ஆண்டு முதல் உலகளவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனையாளராக செயல்படுபவர் தான் ஹர்ஷா போகுல். இவர் அண்மையில் பல பேட்டிகளில் கலந்துக்கொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் தோனிக்கு பிடிக்காத விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தோனி தங்கியிருக்கும் அறையின் கதவுகள் எப்போதும் திறந்து தான் இருக்கும், ஒரு போதும் பூட்டப்படாது என்று தெரிவித்தார்.மேலும் அவரது அறைக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்,போகலாம் அவருடன் பேசலாம் ஆனால் அவருக்கு தொலைப்பேசியில் மட்டும் அழைப்பு விடுக்க கூடாது என்றும் தோனிக்கு அந்த செயல் பிடிக்காது என்று ஹர்ஷல் போகும் தெரிவித்துள்ளார்.

Also Read: 12 வருடங்களுக்குப் முன் தோனி செய்த அநீதியை போட்டுடைத்த சேவாக்.. காப்பாற்றி தூக்கிவிட்ட சச்சின்

மேலும் பேசிய அவர், தான் ஒரே ஒருமுறை மட்டும் தோனியுடன் அமர்ந்து இரவு உணவு சேர்ந்து சாப்பிட்டதாகவும்,அந்த இடத்தில் நான் உட்பட தோனியின் மனைவி, தோனி மற்றும் எனது நண்பர் இருந்ததாக தெரிவித்தார். உணவு சாப்பிட்ட பின் தோனி தான் சாப்பிட்ட தட்டை அவர் கைகளிலேயே கழுவி துடைத்து, அதன் இடத்தில் வைத்து விட்டு சென்றதாக அவர் பூரிப்புடன் தெரிவித்தார்.

இதை பார்த்து நான் ஆச்சரியப்பட்டதாக தெரிவித்த அவர், தன் வாழ்வில் எந்த ஒரு கிரிக்கெட் வீரரையும் இவ்வளவு பணிவுடன் பார்க்கவில்லை என தெரிவித்தார். இவர் பேசிய பேட்டி அண்மையில் வைராலாகியுள்ள நிலையில், மிடில் கிளாசில் வளர்ந்த தோனி தான் வளர்ந்த சூழலை எப்போதும் மறக்கமாட்டார் என அவரது ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

Also Read: கிரிக்கெட் வீரர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 5 நடிகைகள்.. இந்த லிஸ்ட்ல தோனியும் இருக்காரா?

Trending News