ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு நோ சொன்ன நடிகை.. வெறியில் திடீரென லிப்லாக் அடிச்ச ஹீரோ

திரையில் நாம் பார்த்து ரசிக்கும் ஹீரோக்கள் பலரும் திரைக்குப் பின்னால் ஹீரோவாகவே இருப்பது கிடையாது. சில வில்லத்தனமான வேலைகளை செய்யும் நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் பிரபலமாக இருக்கும் ஹீரோ ஒருவர் பெண்கள் விஷயத்தில் ரொம்பவும் வீக். அவர் படத்தில் ஒரு நடிகை ஹீரோயினாக கமிட் ஆகிவிட்டால் கட்டாயம் அவருக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்தே ஆக வேண்டும்.

முன்னணி நடிகையாக இருந்தாலும், புதுமுக நடிகையாக இருந்தாலும் அனைவருக்கும் இதே கண்டிஷன் தான். இதனாலேயே பல நடிகைகள் இவருடன் நடிக்கும் வாய்ப்பை இழந்து இருக்கின்றனர். ஆனால் இப்போது முன்னணியில் இருக்கும் நடிகை ஒருவர் இவருடைய குணம் பற்றி தெரியாமல் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார்.

Also read: அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு பகிரங்க மிரட்டல் விட்ட நடிகர்.. மறுத்ததால் நடிகைக்கு நேர்ந்த கதி

ஆரம்பத்தில் இது போன்ற கண்டிஷன்கள் எதுவும் நடிகைக்கு சொல்லப்படவில்லை. ஏனென்றால் நடிகையும் சினிமா குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் தான். அதனாலேயே நடிகர் கொஞ்சம் அடக்கி வாசித்து இருக்கிறார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நடிகைக்கு அவர் மறைமுகமாக அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்களை கொடுத்தாராம்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அந்த நடிகை அவர் வலையில் சிக்காமல் எஸ்கேப் ஆகி இருக்கிறார். பொருத்து பொருத்து பார்த்த அந்த ஹீரோ திடீரென நடிகை எதிர்பார்க்காத சமயத்தில் லிப் லாக் செய்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதுவும் இந்த சம்பவம் சூட்டிங் ஸ்பாட்டிலேயே நடந்திருக்கிறது. அதாவது அந்த திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் ஹீரோ, ஹீரோயின் இருவரும் லிப் லாக் செய்வது போன்று காட்டப்பட்டிருக்கும்.

Also read: பப்ளிசிட்டிக்காக பலான வீடியோ வெளியிட்ட நடிகை.. இப்ப அதுவே வினையாகி போன பரிதாபம்

அது பற்றி முன்பே ஹீரோயினிடம் கூறிய பட குழு அது போன்று நடித்தால் போதும், ஒரிஜினலாக லிப் லாக் செய்ய தேவையில்லை என்று கூறி இருக்கிறது. இதனால் நடிகை தைரியமாகவே அந்த காட்சியில் நடிக்க சம்மதம் சொல்லி இருக்கிறார். ஆனால் குறிப்பிட்ட அந்த காட்சியின் போது எதிர்பாராத விதமாக நடிகர் உண்மையாகவே லிப் லாக் செய்து இருக்கிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகையிடம் அந்த ஹீரோ தத்ரூபமாக வரவேண்டும் என்று ஒரு நொண்டி சாக்கை சொல்லி இருக்கிறார். நடிகரின் இந்த பழிவாங்கும் படலத்தை பார்த்து பயந்து போன அந்த நடிகை முடிந்தவரை அந்த படத்தை விரைவாக முடித்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம். அதன் பிறகு அந்த நடிகை சம்பந்தப்பட்ட நடிகருடன் வேறு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: அப்பாவை போல் மாசாக என்ட்ரி கொடுக்க துடிக்கும் வாரிசு.. ரகசியமாக நடந்து வரும் பயிற்சி

Trending News