பொதுவாக லோகேஷ் கனகராஜ் படத்தில் நடித்த நடிகர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கும். அதுமட்டுமின்றி லோகேஷ் தனது எல்சியுவில் அந்த நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். ஆனால் லோகேஷ் படத்தில் நடித்தும் தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடர முடியாமல் நடிகர் ஒருவர் தவற விட்டுள்ளார்.
ஆனால் எண்பதுகளில் சினிமாவில் நுழைந்த அந்த நடிகர் காமெடி, குணச்சித்திரம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் பின்னி பெடல் எடுக்கக் கூடியவர். தற்போது வரை அவர் சினிமாவில் நடித்து வந்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதுவரைக்கும் 200க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
அதாவது 1983இல் பொய்க்கால் குதிரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சார்லி. அதன் பிறகு பல படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுக்கு நண்பராக நடித்துள்ளார். இப்போது இளம் ஹீரோக்களுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான மாநகரம் படத்தில் சார்லியை நடிக்க வைத்திருந்தார். இந்த படத்தில் இவருக்கு பாராட்டு கிடைத்தாலும் அதன் பிறகு லோகேஷ் சார்லியை தனது படங்களில் பயன்படுத்தவில்லை. ஆனாலும் சார்லியால் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடர முடியவில்லை.
அதாவது சார்லி தற்போது வரை பல படங்களில் நடித்து வந்தாலும் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படவில்லை. லோகேஷ் தற்போது விஜய்யின் லியோ அடுத்ததாக கைதி 2 படங்களை இயக்கவிருக்கிறார்.
இந்த படங்களில் சார்லிக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
சாதாரணமாக 200க்கும் மேற்பட்ட படங்களில் நடிப்பது சாதாரண விஷயம் கிடையாது. அந்த வகையில் சார்லி தற்போது வரை சினிமாவில் தனக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடும் படியான படம் வருங்காலத்தில் அவருக்கு அமையும் என எதிர்பார்க்கலாம்.