வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஹிட் கொடுத்து 4 வருஷம் ஆச்சு.. விஷாலை அதல பாதாளத்தில் தள்ளிய 5 படங்கள்

தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கக் கூடியவர் தான் நடிகர் விஷால். இவரது நடிப்பில் ஹிட் கொடுத்து நான்கு வருடங்கள் ஆகிய நிலையில் தற்பொழுது இவர் நடிப்பில் தோல்வி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். அந்த வகையில் விஷாலை அதல பாதாளத்தில் தள்ளிய 5 படங்களை இங்கு காணலாம்.

அயோக்கியா: இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த ஆக்சன் கலந்த திரைப்படம் ஆகும். படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ராசி கண்ணா நடித்துள்ளார். இதில் ரவுடி கலந்த போலீஸ் கதாபாத்திரத்தில் கெத்தாக நடித்துள்ளார். இருந்தாலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்றே சொல்லலாம்.

Also Read: நான் பண்ண ஒரே தப்பு அவரு படத்துல நடிச்சது தான்.. தோல்வி விரக்தியில் கதறும் விஷால்

ஆக்சன்: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான ஒரு அதிரடி திரைப்படம் ஆகும். இதில் விஷால் உடன் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் இவர்கள் இருவரும் உளவுத்துறை அதிகாரியாக இருந்து பயங்கரவாதிகளை வேட்டையாடும் உளவாளியாக செயல்படுகின்றனர். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றாலும் வணிக ரீதியாக தோல்வியை மட்டுமே சந்தித்தது.

எனிமி: இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எனிமி. இதில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருப்பார். படத்தில் சிங்கப்பூரில் வாழும் தமிழர்களுக்கு ஏற்படும் அநீதியை விஷால் எவ்வாறு திறம்பட கையாளுகிறார் என்பதை மையமாக வைத்து இப்படமானது அமைந்துள்ளது. இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

Also Read: நான் டைரக்ட் பண்ண படத்தை என்னாலயே பாக்கமுடியல என்ற விஷால்.. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி

சக்ரா: இயக்குனர் எம்எஸ் ஆனந்த் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த ஒரு அதிரடி திரைப்படம் ஆகும். படத்தில் விஷால் உடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமானது கணினி குற்றங்கள் மற்றும் இணைய வணிக மோசடிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தாகும். இப்படம் நேர்மறையான மற்றும் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

ஆம்பள: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நகைச்சுவை திரைப்படமாகும். இதில் விஷால் உடன் ஹன்சிகா மோத்வானி ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக வெளிவந்தது. மேலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வி படமாகவே அமைந்தது.

Also Read: இரும்புத்திரை இரண்டாம் பாகத்தில் அஜித் பட நடிகை.! மாஸ் தகவல் இதோ

இவ்வாறு இந்த 5 படங்களும் விஷால் நடிப்பில் வெளிவந்து அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த திரைப்படங்கள் ஆகும். இதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெளியான இரும்புத்திரை திரைப்படம் விஷாலுக்கு ஓரளவு வெற்றியை பெற்று தந்தது. இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்திருந்தார். அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்தது.

Trending News