புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ராஜமவுலி ஸ்டைலில் அடுத்து உருவாக உள்ள பிரம்மாண்ட படம்.. பாகுபலி வசூலை முறியடிக்க திட்டம்

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. ஏனென்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மீறி பல விஷயங்களை ராஜமௌலி இந்த படத்தில் உள்ளடக்கியதால் மிகப்பெரிய வெற்றியடைந்து வசூலை வாரி குவித்தது.

இப்படத்தின் வசூலை தற்போது வரை எந்த படத்தாலும் முறியடிக்க முடியாமல் திணறி வருகிறது. மேலும் ராஜமௌலியை நினைத்தால் மட்டும் தான் இந்தப் படத்தின் வசூலை முறியடிக்க முடியும் என்ற பேச்சும் இருந்து வருகிறது. ஆனால் இப்போது பாகுபலி போல அடுத்த பிரம்மாண்ட படம் உருவாக இருக்கிறது.

Also Read : பிரம்மாண்டத்தில் ராஜமௌலி,ஷங்கரையே ஓரங்கட்டிய தில் ராஜ்.. தலை சுற்ற வைக்கும் வாரிசு படத்தின் வீட்டு பட்ஜெட்

அதாவது சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருந்த இந்த படத்தை கே ஜி எஃப் பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. மிக கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் வசூலை வாரி குவித்தது.

மேலும் கன்னட மொழியில் உருவான காந்தாரா படத்தின் வரவேற்பை பார்த்து மற்ற மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. அவ்வாறு எல்லா மொழியிலும் காந்தாரா படத்திற்கு வரவேற்பு அதிகமாக கிடைத்தது. இந்நிலையில் சமீபத்தில் ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்தை பற்றி கூறியுள்ளார்.

Also Read : ராஜமௌலி, ரிஷப் ஷெட்டி பார்த்து கத்துக்கோங்க.. விக்ரம், சுகாசினியை வறுத்தெடுக்கும் திரையுலகம்

அதில் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ரிஷப் கூறியுள்ளார். மேலும் அந்தப் படத்தின் கதையைப் பற்றிய சஸ்பென்ஸையும் உடைத்துள்ளார். அதாவது பாகுபலி படம் உருவாகும்போதே இரண்டாம் பாகத்தை மனதில் வைத்து தான் எடுத்திருந்தார்கள்.

மேலும் படத்தின் பிளாஷ் பேக் காட்சிகள் பாகுபலி 2 படத்தில் தான் இடம்பெறும். அதேபோல் தான் காந்தாரா படத்தையும் ரிஷப் ஷெட்டி எடுக்கப் போகிறாராம். அந்தப் படத்தில் வரும் கடவுளை பற்றி முந்தைய காலத்தில் நடந்த விஷயங்களை காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தில் எடுக்க உள்ளதாக கூறியுள்ளார். இதனால் பாகுபலி வசூலை ரிஷப் ஷெட்டி முறியடிக்க உள்ளார். எப்போது இந்த படம் உருவாகும் என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

Also Read : உலக அரங்கில் வெற்றியை பதித்த ராஜமௌலி.. சரித்திரம் படைத்த ஆர்ஆர்ஆர்

Trending News