சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் ஹிட் அடித்த 5 படங்கள்.. இன்று வரை மறக்க முடியாத ரோஜா பட காட்சிகள்

சினிமாவில் கேமரா ஆங்கில் என்பது நம் எப்படி பார்க்க வேண்டும் என்பதை முடிவு செய்வது தான். தனது கேமராவை வித்தியாசமான முறையில் காட்டி வெவ்வேறு கோணத்தில் படத்தை சொல்வது தான் ஒரு ஒளிப்பதிவாளரின் முக்கிய பங்காக இருக்கும். அந்த வகையில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் ஹிட் அடித்த ஐந்து படங்களை பார்ப்போம்.

தளபதி: மணிரத்னம் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான தளபதி திரைப்படம். இதில் ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த்சாமி, ஸ்ரீவித்யா பானுப்ரியா, ஷோபனா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு இசையமைத்தது இளையராஜா. இந்தப் படத்தில் கோவிலில் ரஜினி தனது அம்மாவை நினைத்தது ஒரு பக்கத்திலும் மற்றும் ஸ்ரீவித்யா மகனை நினைத்து அழும் போதும், ஜெய்சங்கர் இருவரையும் பார்த்து கலங்கும் காட்சியை மிகவும் அற்புதமாக காட்டி இருப்பார். இந்த காட்சி இன்றுவரை யாராலும் மறக்க முடியாத அளவிற்கு துல்லியமாக சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து இருப்பார்.

Also read: கமலின் வெற்றி பார்முலாவை கையில் எடுக்கும் ரஜினி.. ரோலக்ஸ் செய்யப் போகும் சம்பவம்

உயிரே: 1998 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் ஷாருக்கான், மனிஷா கொய்ராலா, ப்ரீத்தி ஜிந்தா இவர்கள் நடிப்பில் வெளிவந்தது. இந்த படத்திற்கு இசையமைத்தது ஏ.ஆர் ரகுமான். இந்தப் படத்தில் அழகான கிராமப்புறங்களில் நகரும் ஒரு ரயிலின் மேல் நடன கலைஞர்களுடன் ஒரு நீண்ட நடன காட்சியை அழகாக சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து இருப்பார். மேலும் இந்த படத்தில் பாலைவனத்தில் வரும் நடனக் காட்சியையும் அனைவரும் ரசிக்கும்படி அழகாக காட்டியிருப்பார். இந்தப் படத்திற்காக சந்தோஷ் சிவன் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை பெற்றார்.

துப்பாக்கி: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் 2012 ஆம் ஆண்டு துப்பாக்கி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், சத்யன் மற்றும் மனோபாலா ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்தப் படத்திற்கான காட்சிகளை எடுக்கும் போது பொது இடத்தில் அதிகமான மக்கள் இருப்பதால் மறைமுகமான கேமராக்களை பெரும்பாலான இடத்தில் வைக்கப்பட்டு சந்தோஷ் சிவன் கச்சிதமாக ஒளிப்பதிவு செய்து இருப்பார். இந்த படம் பாக்ஸ் ஆபீஸ்ல அதிகமான லாபத்தை கொடுத்தது.

Also read: தளபதி 68 படத்துக்கு முன்பே உறுதியான 69வது படம்.. மீண்டும் இணைய போகும் வம்பான கூட்டணி

ராவணன்: மணிரத்தினம் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த ராவணன் திரைப்படம். இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரித்விராஜ், பிரியாமணி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமே ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மட்டுமே. ஏனென்றால் இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் கேமராவை அழகாக மாற்றி அமைக்கப்பட்டு படம் பிடித்து காட்டி இருப்பார். இந்த படம் பெரிய அளவில் ஹிட் படமாக அமைந்ததற்கு இவருடைய ஒளிப்பதிவும் ஒரு பெரிய காரணம்.

ரோஜா: மணிரத்தினம் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா மற்றும் நாசர் ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்தை இசையமைத்தவர் ஏ.ஆர் ரகுமான். இந்தப் படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை பாடலின் மூலம் கிராமத்து வாழ்க்கையை அழகாக சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருப்பார். அத்துடன் இந்த படத்தில் வரும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, குன்னூர், ஊட்டி மற்றும் மணாலி போன்ற படப்பிடிப்பு தளங்களை அருமையாக காட்டி இருப்பார். இந்த படத்தை இன்று வரை யாராலும் மறக்க முடியாத காட்சியாக இருக்கிறது.

Also read: விக்ரமுக்கு கிடைத்த வாழ்க்கை, வாரிசு நடிகருக்கு கிடைக்கவில்லை.. டீலில் விடப்பட்ட சாக்லேட் பாய்

Trending News