சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பிரகாஷ்ராஜ் காமெடியில் கலக்கிய 5 படங்கள்..தேங்காய் சீனிவாசன் போல் லூட்டி அடித்த தில்லுமுல்லு

பொதுவாக சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் யாரும் காமெடியாக நடிப்பதற்கு யோசிப்பார்கள். ஆனால் பிரகாஷ்ராஜ் எந்தவித யோசனையும் இல்லாமல் அசால்டாக படங்களில் காமெடி கேரக்டரை எடுத்து நடித்திருப்பார். அப்படி இவர் நடித்த காமெடியான ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

மொழி: ராதா மோகன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மொழி திரைப்படம். இதில் பிரித்விராஜ், ஜோதிகா, பிரகாஷ்ராஜ் மற்றும் ஸ்வர்ணமால்யா ஆகியோர் நடித்தனர். இப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்தார். இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜின் கதாபாத்திரம் மிகவும் வேடிக்கையாகவும் மற்றும் நகைச்சுவையாகவும் இவரின் கதாபாத்திரத்தை ரசிக்கும்படி செய்திருப்பார்.

Also read: முரட்டு வில்லனாக 5 குடும்பப் படங்களில் கலக்கிய பிரகாஷ்ராஜ்.. எல்லாமே சூப்பர் ஹிட்டுனா எப்படி ப்ரோ

தோழா: வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு தோழா திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வெளிவந்தது. இதில் கார்த்திக், நாகார்ஜுனா, தமன்னா, பிரகாஷ்ராஜ் மற்றும் விவேக் ஆகியோர் நடித்தனர். இந்த படத்தில் பிரகாஷ்ராஜை வச்சு எல்லாரும் காமெடி செஞ்சிருப்பாங்க. அந்த அளவுக்கு பிரகாஷ்ராஜ் இதில் நகைச்சுவையாக நடித்திருப்பார். அதிலும் முக்கியமாக கார்த்திக் வரைந்த ஓவியத்தை வைத்து பிரகாஷ்ராஜ் செய்யும் காமெடியை மறக்கவே முடியாது.

அபியும் நானும்: 2008 ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜ் தயாரித்து ராதா மோகன் இயக்கத்தில் நகைச்சுவையாக வெளிவந்த திரைப்படம் அபியும் நானும். இதில் பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் நடித்திருந்தார்கள். இதில் பிரகாஷ்ராஜ் நடிப்பும் மற்றும் பேச்சும் காமெடி கலந்த நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்தி இருப்பார்.

Also read: பிரகாஷ்ராஜ் லெவலுக்கு பார்வையாலேயே மிரட்டிய வில்லன்.. கமலுக்கே டஃப் கொடுத்தவருக்கு வந்த கெட்ட நேரம்

திருவிளையாடல் ஆரம்பம்: பூபதி பாண்டியன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு இத்திரைப்படம் வெளிவந்தது. இதில் தனுஷ், ஸ்ரேயா, பிரகாஷ்ராஜ், கருணாஸ் ஆகியோர் நடித்தனர். இதில் பிரகாஷ்ராஜ் நடிப்பு இயல்பாகவே இருந்தாலும் அவருடைய நடவடிக்கைகள் மிகவும் நகைச்சுவையாக காணப்படும். அந்தளவுக்கு கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி நடித்திருப்பார்.

தில்லு முல்லு: பத்ரி இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு தில்லுமுல்லு திரைப்படம் நகைச்சுவையாக வெளிவந்தது. இப்படத்தில் சிவா,இஷா தல்வார், மற்றும் பலர் நடித்திருந்தார்கள். இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக கொண்டே எடுக்கப்பட்டது. ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளிவந்த தில்லு முல்லு படத்தில் தேங்காய் சீனிவாசன் கேரக்டரை எடுத்து அப்படியே பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார். இதில் இவர் அடித்த லூட்டியே எப்பொழுதுமே மறக்க முடியாது அந்த அளவுக்கு நகைச்சுவையை வெளிப்படுத்தி இருப்பார்.

Also read: தயாரிப்பிலும் பெத்த லாபம் பார்த்த பிரகாஷ்ராஜ்.. காசு போட்ட 6 படங்களுமே ஹிட்

 

Trending News