100வது நாள் வெற்றியில் லவ் டுடே, பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய மொத்த வசூல் விவரம்.. பிரதீப்பின் அடுத்த பட அப்டேட்

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படம் ரிலீஸ் ஆகி 100வது நாளை வெற்றிகரமாக எட்டி இருக்கும் நிலையில், படத்திற்கான மொத்த வசூல் விவரம் தற்போது பாக்ஸ் ஆபிஸையே மிரட்டி உள்ளது.

வெறும் 9 கோடியில் தயாரான லவ் டுடே திரைப்படம் 100 நாட்களில் 80 கோடி வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்திருக்கிறது. இதில் கதாநாயகன் மற்றும் கதாநாயகி செல்போனை மாற்றிக் கொள்வதால் காதலர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினையை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டது.

இளசுகள் விரும்பும் வகையில் மிகவும் எதார்த்தமான கதையைக் கொண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். இவருடன் இந்த படத்தில் இவானா, சத்யராஜ், யோகி பாபு, ராதிகா உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது.

கடந்த நவம்பர் 4ம் தேதி வெளியான இந்த படம் இன்றுடன் 100வது நாளை தொட்டியுள்ளது. மேலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான தியேட்டர்களில் மட்டும் அல்லாமல் பிற தியேட்டர்களிலும் இந்த படம் 100வது நாள் வரை ஓடி இருக்கிறது. இதனால் லவ் டுடே தமிழகம் முழுவதும் இரண்டாவது ரவுண்டு ஓடி சாதனை படைத்துள்ளது.

மேலும் இந்த படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதனுக்கும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. தற்போது பிரதீப் ரங்கநாதன் சிம்புவின் கொரோனா குமார் படத்தில் நடிக்க இருக்கிறார். நீண்ட நாட்களாக இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்படாமல் இருந்த நிலையில், சிம்பு கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் இந்த வாய்ப்பு பிரதீப் ரங்கநாதனுக்கு சென்றிருக்கிறது.

ஆகையால் சிம்பு கொரோனா குமார் படத்தில் இருந்து வெளியேறி விட்டதால், அவருக்கு பதில் இயக்குனர் கோகுல் இயக்கும் கொரோனா குமார் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கப் போகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.