சினிமாவில் நட்சத்திர ஜோடிகளான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருமணத்திற்குப் பிறகு தங்களது கேரியரில் மிகப்பெரிய உயரத்தை அடைந்து வந்தனர். அதாவது நயன்தாராவுக்கு பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் உடன் ஜவான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதேபோல் விக்னேஷ் சிவனுக்கு அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகப்பட்டதாகவும் அவருக்கு பதிலாக மகிழ்திருமேனி இந்த படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
Also Read : மோசமான ஆட்டிட்யூடால் பல வாய்ப்புகளை இழந்த விக்னேஷ் சிவன்.. பதறி ஓடிய முதலாளி
மேலும் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து ஏகே 62 என்ற பெயரை சமீபத்தில் நீக்கி இருந்தார். இதனால் கிட்டத்தட்ட இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்பது உறுதியானது. மேலும் சமூக வலைத்தளங்களில் அஜித் மீது விக்னேஷ் சிவன் கடும் கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளிவந்தது.
ஏனென்றால் ஒரு படத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகு அந்த படத்தில் இருந்து இயக்குனர் தூக்கப்பட்டால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது மிக கடினம். இதனால் இனிமேல் தனது கேரியர் என்ன ஆகுமோ என்ற பயத்தில் விக்னேஷ் சிவன் இருப்பதாக கூறப்பட்டது.
Also Read : விக்னேஷ் சிவனின் வாழ்க்கையை சல்லி சல்லியாய் நொறுக்கும் அஜித்.. ரெடியாக உள்ள அடுத்த ஆப்பு
ஆனால் தூறல் நின்றாலும் தூவானம் நிக்காது என்பது போல மீண்டும் விக்னேஷ் சிவன் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார். அதாவது தனது சமூக வலைதள பக்கத்தில் அஜித்தின் சமீபத்திய புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். ஆகையால் மீண்டும் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க வாய்ப்பு இருக்கிறதா என்று பலரும் கூறி வருகிறார்கள்.
ஆனால் விக்னேஷ் சிவன் ஆரம்பத்தில் இருந்தே அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து தன்னை தூக்கி விட்டாலும் ஏகே 63 படத்தில் அஜித் வாய்ப்பு கொடுப்பார் என்ற நம்பிக்கையில் விக்னேஷ் சிவன் உள்ளாராம். அதனால் தான் தொடர்ந்து அஜித்தின் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
Also Read : விக்னேஷ் சிவன் போல் மகிழ்திருமேனிக்கும் வரும் ஆப்பு.. ரீ என்ட்ரி இயக்குனர்களுடன் பேச்சுவார்த்தையில் லைக்கா