வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

2 முறை விவாகரத்தாச்சு.. 3-வது காதலனுடன் நெருங்கிய புகைப்படத்தை வெளியிட்ட டாப் சீரியல் நடிகை

முதல் திருமணத்தை பெற்றோர்கள் பார்த்து அவர்கள் சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டு பிரபல சீரியல் நடிகை, சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதைத்தொடர்ந்து அமெரிக்கா சென்ற அந்த சீரியல் நடிகை அங்கு ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

அந்த திருமண வாழ்க்கையும் நிலைக்காமல் போகவே அவரையும் வெகு சீக்கிரமே விவாகரத்து செய்துவிட்டு தற்போது தனிமையில் இனிமையை தேடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் ஆண் நண்பருடன் நெருக்கமாக நின்று கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.

Also Read: ஒரே நாளில் கணித்த ஆண்டவர், பிக் பாஸ் நடிகருக்கு அடித்த ஜாக்பாட்.. கமலுடன் இணையும் கூட்டணி

இந்த புகைப்படத்தை பார்த்தால் இவர்கள் இருவரும் காதலர்களா என்றும், மீண்டும் காதலில் விழுந்து விட்டீர்களா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். முதலில் விமான பணி பெண்ணாக பணிபுரிந்த இவர், அதன் பிறகு சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டு சன் தொலைக்காட்சியின் சன் சிங்கர், கடிதம், என் இனிய தோழியே போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

அதன் பிறகு வாணி ராணி, மரகத வீணை, காயத்ரி போன்ற சீரியல்களில் முக்கிய வேடங்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்தார். தற்போது டிஆர்பி-யின் டாப் லிஸ்டில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக ராதிகா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: டிஆர்பி-யில் தெறிக்க விட்ட டாப் 10 சீரியல்கள்.. அசைக்க முடியாத அசுரனாக மாறிய ஒரே சேனல்

மேலும் இவர் சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியின் மனைவியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் தோன்றி பேமஸானார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

தற்போது சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் ரேஷ்மா ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ‘3-வது முறையாக ரேஷ்மா காதலில் விழுந்துவிட்டார்’ என்று கிசுகிசுக்கின்றனர்.

ரேஷ்மா ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்

reshma-cinemapettai
reshma-cinemapettai

Also Read: டிஆர்பி-யில் முதல் மூன்று இடத்தை பிடித்த சேனல்கள்.. விஜய் டிவி-கே தண்ணி காட்டிய பிரபல டிவி

Trending News