இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி பட்டையை கிளப்பியது. நடிகை இவானா, ராதிகா சரத்குமார், ரவீனா, யோகிபாபு, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம் கடந்தாண்டின் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போதுள்ள இளைஞர்கள் தங்களது காதலை இன்றைய காலத்தில் எப்படி புரிந்துகொண்டுள்ளார்கள் என்ற கதையின் அடிப்படையில் இப்படம் உருவானது.
வெறும் 5 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் தெலுங்கு மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு ஒட்டுமொத்தமாக 100 கோடி வரை வசூலை அள்ளிக்குவித்தது. ஏ.ஜீ.எஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்த நிலையில், உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் மூலமாக திரையரங்குகளுக்கு இப்படம் விநியோகம் செய்யப்பட்டது.
Also Read:6 பெரும் முதலைகளை ஓரங்கட்டிய பிரதீப் ரங்கநாதன்.. முதல் பந்திலேயே அடித்த இமாலய சிக்சர்
இந்நிலையில் 21 வருடங்களுக்கு முன்பாகவே லவ் டுடே செய்த சாதனையையும் தற்போதுள்ள முன்னணி நடிகர் செய்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும், இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்திற்கு என்று தனி ரசிகர்கள் உண்டு. இவரது தனித்துவமான கதையில் உருவான படத்தில் நடித்த ஹீரோ தான் இன்றைய லவ் டுடே படத்தின் சாதனையை அன்றே செய்துள்ளார்.
இயக்குனர் செல்வராகவனின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜா 80 களில் பல படங்களை தொடர்ந்து இயக்கியவர். இதனிடையே அவரது தொடர் படங்கள் தோல்வியாக அமைந்த நிலையில், பல லட்ச ரூபாய் கடனுக்கு ஆளானார். அந்த கடனை அடைப்பதற்கு எவ்வளவோ முயற்சிகள் செய்த கஸ்தூரி ராஜா, தனது இளைய மகனான தனுஷை சினிமாவுக்குள் நடிக்க வைத்து அறிமுகப்படுத்தினார்.
இன்று இளைஞர்களின் ஆஸ்தான நாயகனாக வலம் வரும் தனுஷ், ஆரம்பத்தில் இவர் நடிக்க வந்தபோது இவரது உருவத்தை வைத்து கேலி செய்யப்பட்ட நிலையில், பல இன்னல்களை சந்தித்தார். அப்படி இவர் முதன் முதலாக நடித்த படம் தான் 2002 ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில், செல்வராகவனின் கதையில் வெளியான துள்ளவதோ இளமை திரைப்படம்.
தனுஷ், ஷெரின், அபினை உள்ளிட்டோர் நடித்த இப்படத்தில் பள்ளிக்கால காதலை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கும். இப்படம் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் மாபெரும் ஹிட்டான நிலையில், வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றது. 21 வருடங்களுக்கு முன்பாகவே 50 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் 4 கோடி வரை வசூலை அள்ளிக்குவித்தது. இன்றைய லவ் டுடே படத்தின் சாதனையை அன்றே தனுஷ் இப்படம் மூலமாக முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: பணத்தாசையால் கேரியரை தொலைக்கும் 3 டாப் ஹீரோக்கள்.. வாரிசு விஜய்யின் லிஸ்டில் இணைந்த தனுஷ்