லியோ படக்குழுவினருடன் காதலர் தினத்தை கொண்டாடிய திரிஷா.. வைரலாகும் புகைப்படம்

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் உள்ள படம் தான் விஜயின் 67 வது படமான லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் நிலையில் எஸ்.எஸ் லலித்குமார் தயாரிக்கிறார். கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களின் தொடர் கதையாக உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது கடும் குளிரில் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

நடிகைகள் திரிஷா, ப்ரியா ஆனந்த், நடிகர்கள் அர்ஜுன், மன்சூர் அலிகான், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதனிடையே இப்படப்பிடிப்பிலிருந்து நடிகை திரிஷா திடீரென கிளம்பி சென்னை வந்ததாக செய்திகள் வெளியானது. காஷ்மீரில் உள்ள கடும் குளிர் தாங்க முடியாமல் துண்ட காணோம், துணிய காணோம் என திரிஷா புறப்பட்டதாக செய்திகள் வெளியானது.

ஆனால் இந்த விஷயம் முற்றிலும் தவறானது என நிரூபிக்கும் வகையில் த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் அப்லோட் செய்த புகைப்படத்தால் நிரூபணமாகியுள்ளது. நடிகை த்ரிஷா விஜய்யுடன் இணைந்து குருவி, திருப்பாச்சி, ஆதி, கில்லி உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்தவர். இந்த நான்கு படங்களும் விஜய் மற்றும் த்ரிஷாவின் கேரியருக்கு முக்கிய படங்கள் எனலாம். அதிலும் கில்லி திரைப்படத்தில் வரும் த்ரிஷாவின் தனலட்சுமி கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாதவை.

அந்த வகையில் திரிஷா சரியாக 14 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் லியோ படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கிறார். இதுவே த்ரிஷாவின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திடீரென திரிஷா, லியோ படப்பிடிப்பு தளத்திலிருந்து புறப்பட்டார் என சொன்னவுடன் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே நடிகை திரிஷா எப்போதுமே சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்க கூடியவர்.

அந்த வகையில், இன்று காதலர் தினத்தை முன்னிட்டு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அதில் காஷ்மீர் பனி சூழ, காஷ்மீர் ரோஜா பூங்கொத்துக்களுடன் ஒரு புகைப்படமும், திரிஷா லியோ படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படமும் அப்லோட் செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீர் பனியில் தனது காதலர் தினத்தை இவர்களுடன் கொண்டாடி வருவதாக திரிஷா தெரிவித்துள்ளார். சிறப்பு நிற டீ ஷர்ட், கருப்பு நிற கோட்டுடன் நிற்கும் த்ரிஷாவுடன், அவரது உதவியாளர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. நான் எங்கேயும் போகவில்லை, இங்கே தான் தளபதி கூட நடித்து கொண்டிருக்கிறேன் என திரிஷா இந்த புகைப்படம் மூலமாக புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.