வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

வன்மத்துடன் பாக்யாவை பழிவாங்கும் கோபி.. கல்யாணமான கையோடு நடுரோட்டிற்கு வரும் வாரிசு

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில், 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 50 வயதில் கல்லூரி காதலியான ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டது மட்டுமல்லாமல், மனைவி பாக்யாவையும் சுயமரியாதையுடன் வாழ விடாமல் கொத்தி குடிக்கிறார்.

அதிலும் இப்போது பாக்யா தங்கி இருக்கும் வீடு கோபியின் பெயரில் இருப்பதால் வீட்டிற்குரிய மதிப்புக்கான பணத்தை கொடுத்து விடு, இல்லை என்றால் வீட்டை காலி செய்து விடு என்று ஒரு வாரம் அவகாசம் கொடுத்தார். அப்போது கோபியிடம் எழில் கேட்கிற பணத்தை கொடுத்து வீட்டை வாங்குகிறேன் என்று  சபதம் செய்தார்.

Also Read: தொடர்ந்து கர்ப்பமாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்கள்.. மீனா கெதி அதோ கெதி

ஆனால் அவரால் பணத்தை ரெடி பண்ண முடியாததால் கோபியின் அம்மா ஈஸ்வரி, கோபியின் வீட்டு வாசலுக்கே சென்று, இந்த வீட்டை கேட்க வேண்டாம் என்று கெஞ்சுகிறார். ஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத நயவஞ்சகன் கோபி, தன்னுடைய வீட்டில் இருக்கும் பாக்யா மற்றும் எழில் இருவரையும் வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்.

அதன் பிறகு அதே வீட்டில் ராதிகாவுடன் தன்னுடைய அம்மா, அப்பா, இனியா, செழியன், ஜெனி உள்ளிட்டருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறார். இது ஈஸ்வரி மற்றும் கோபியின் தந்தை, இனியா உள்ளிட்டோருக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை.

Also Read: 2 முறை விவாகரத்தாச்சு.. 3-வது காதலனுடன் நெருங்கிய புகைப்படத்தை வெளியிட்ட டாப் சீரியல் நடிகை

தற்சமயம் பாக்யா மற்றும் எழில் இருவருக்கும் இந்த வீட்டை வாங்கும் அளவுக்கு பணம் இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறிவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் கோபியிடம் மானங்கெட்ட இந்த வீட்டில் இருப்பதை காட்டிலும் வாடகை வீட்டில் இருந்து விடலாம் என்று பாக்யா வீம்புடன் இருக்கிறார்.

ஆனால் ஈஸ்வரி கோபியிடம் தன்மையுடன் பேசி இந்த வீட்டிலேயே இருக்க பார்க்கிறார். அதேபோன்று பாக்யாவையும் செய்ய சொல்கிறார். ஆனால் இது பாக்யாவிற்கு கௌரவ பிரச்சினையாக இருப்பதால் கோபியிடம் கெஞ்சுவதை காட்டிலும் வீட்டை விட்டு வெளியேறிவிடலாம் என்று துணிச்சலுடன் முடிவெடுத்துள்ளார். அத்துடன் கல்யாணம் ஆன கையோடு எழிலும் நடுரோட்டிற்கு வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

Also Read: குக் வித் கோமாளிலிருந்து துரத்தி விடப்பட்ட ஓட்டேரி.. படமே ஓடலனாலும் அடைக்கலம் கொடுத்த ஹீரோ

Trending News