சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

டாப் நடிகரை கண்ட்ரோல் செய்யும் மாடர்ன் சொர்ணாக்கா.. வெளியில ஹீரோ வீட்டுல ஜீரோ

என்னதான் திரைப்படங்களில் பத்து பேரை அடித்து துவம்சம் செய்து ஹீரோயிசம் காட்டினாலும் நிஜ வாழ்க்கையில் நடிகர்களின் நிலைமை வேறு மாதிரி தான் இருக்கும். அப்படித்தான் பிரபல நடிகர் ஒருவரும் வெளியில் ஹீரோவாகவும் வீட்டில் ஜீரோவாகவும் இருக்கிறார். சமூகத்தில் பெரும் அந்தஸ்துடன் வலம் வரும் இந்த நடிகர் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர்.

எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அசால்டாக சமாளிக்க கூடிய இந்த நடிகர் வீட்டில் மட்டும் வாயில்லா பூச்சியாக இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் அவருடைய மனைவி தான். பார்ப்பதற்கு ரொம்பவும் சாதுவாக இருக்கும் நடிகரின் மனைவி ஒரு மாடர்ன் சொர்ணாக்கா போன்றவர். அப்படித்தான் திரையுலகில் அவரைப் பற்றி கிசுகிசுத்து வருகின்றனர்.

ஏனென்றால் நடிகருக்கும் மனைவிக்கும் அனைத்து விஷயத்திலும் ஏழாம் பொருத்தமாக தான் இருக்கும். நடிகர் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் மனைவி அதற்கு நேர் மாறாக வேறொன்றை செய்வார். அது மட்டுமல்லாமல் நடிகர் யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் கூட அதற்கு அவரின் மனைவி முட்டுக்கட்டை போட்டு விடுவாராம்.

Also read: யாருக்கும் மயங்காத பேரழகியுடன் ஒரு இரவை கழித்த கேமரா மேன்.. மனைவியிடம் மாட்டி அசிங்கப்பட்ட சம்பவம்

என்னதான் நடிகர் கோடி கோடியாக சம்பாதித்தாலும் மனைவியை மீறி அவரால் ஒரு பைசா கூட செலவு செய்ய முடியாது. அந்த அளவுக்கு நடிகரின் மனைவி பணத்தாசை பிடித்து திரிகிறார். இதனால் நடிகருக்கு தான் எல்லா விதத்திலும் அவமானம் ஏற்பட்டு வருகிறது. ஆனால் அவருடைய மனைவிக்கு எதைப்பற்றியும் கவலை கிடையாது. அவருடைய இந்த போக்கு தான் நடிகரின் வாரிசுகளின் வாழ்க்கையையும் முடக்கியது.

இப்படி மனைவியின் அடாவடி வேலையால் நொந்து போயிருக்கும் நடிகர் இதை வெளியில் சொல்லக்கூட முடியாமல் தவித்து வருகிறாராம். இவ்வாறு உச்சகட்ட மன உளைச்சலில் இருக்கும் நடிகர் வெளியில் சந்தோஷமாக இருப்பது போல் நடிப்பதை பார்க்க வேதனையாக இருக்கிறது என்கிறது அவருடைய நட்பு வட்டாரம். என்னதான் பணம் இருந்தாலும் நிம்மதியை காசு கொடுத்து வாங்க முடியுமா என்ற நிலையில் தான் நடிகர் தற்போது இருக்கிறார்.

Also read: அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட 5 ஜோடிகள்.. 17 வயது வித்தியாசத்தில் ஜோடி சேர்ந்த ஆர்யா சாயிஷா

Trending News