சினிமாவில் பலர் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமாகி ஜொலித்துள்ளனர். அதற்கு காரணம் அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் சினிமா துறையில் இருந்தால் எளிதில் நடிக்க வந்து விடுகிறார்கள். குழந்தைகளுக்கு சிறு வயது முதலே நடிப்பு மீது உள்ள ஆர்வத்தின் காரணமாகவும் சினிமாவில் நுழைந்தவர்கள் உண்டு.
ஆனால் பிரபல நடிகையை அவரது அம்மா தொழிலுக்காக 14 வயதிலேயே கட்டாயப்படுத்தி உள்ளார். அதாவது நடிகையின் குடும்பத்தில் வேறு யாருடைய வருமானமும் இல்லாத சூழ்நிலையில் தனது மகளை சினிமாவுக்கு அனுப்பி பணம் சம்பாதிக்க வைத்துள்ளார் நடிகையின் அம்மா.
Also Read : அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு பகிரங்க மிரட்டல் விட்ட நடிகர்.. மறுத்ததால் நடிகைக்கு நேர்ந்த கதி
அந்தப் பணத்தை பார்த்தவுடன் அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்து நடிக்க வைத்துள்ளார். அதன் பிறகு மோசமான காட்சிகளில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அந்த காட்சியில் நடிக்க சுத்தமாக விருப்பமில்லை என்றாலும் தயாரிப்பாளர்கள் பணத்தை கொட்டிக் கொடுக்கிறேன் என்று சொன்னவுடன் அவரது அம்மாவே நடிக்க சொல்லி உள்ளார்.
அப்படி நடித்ததாலோ என்னவோ தெரியவில்லை அதன் பிறகு நடிகைக்கு அதே போன்ற கதாபாத்திரங்கள் தொடர்ந்து வந்தது. பின்பு ஐட்டம் நடிகை என்று அவரை முத்திரை குத்தி விட்டனர். இதனாலே அவர் ஹீரோயின் அந்தஸ்தை இழந்து அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
இந்நிலையில் பல வருடங்கள் கழித்து தன்னை பணத்திற்காக சினிமாவில் நடிக்க வேண்டும் என்று எனது அம்மா கட்டாயப்படுத்தியதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இது எல்லாமே ஒரு கட்டத்திற்கு மேல் தான் தனக்கு புரிய வந்ததால் என் அம்மாவை விட்டு விலகி விட்டேன் என்று கண்ணீருடன் நடிகை பேசி இருந்தார்.