குணசேகரனின் கொட்டத்தை அடக்க போகும் சக்தி.. சூடு பிடிக்கும் எதிர்நீச்சல்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் ஆனது ஆணாதிக்கத்தின் பிடியிலிருந்து பெண்கள் எவ்வாறு மீண்டு வருகின்றனர் என்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் தொடராகும். இதில் நடக்கக்கூடிய சம்பவங்களும், பிரச்சனைகளும்  ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கக்கூடிய பிரதிபலிப்பினையே காட்டுகின்றது.

இந்நிலையில் குணசேகரன் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சுதந்திரம் என்பது வெறும் கனவாக மட்டுமே இருந்து வருகிறது. அதிலும் குடும்பத்தில் உள்ள மருமகள்களைத் தவிர தனது அம்மா மற்றும் தங்கைக்கு மட்டுமே சுதந்திரம் கொடுத்துள்ளார். மேலும் அவர்களுக்குமே எந்த ஒரு முடிவினையும் சுயமாக எடுப்பதற்கு விடாமல் தடையாக இருந்து வருகிறார்.

தற்பொழுது குணசேகரனுக்கு எதிராக யாரு என்ன செய்தாலும் அவர்களுக்கு எதிராக தனது அகங்காரத்தை வெளிப்படுத்தி விடுவார். இதில் பலியாடாக சிக்கி இருப்பவர் தான் குணசேகரனின் தங்கை ஆதிரா. இந்நிலையில் தனது தங்கை என்றும் கூட பாராமல் ஆதிராவின் திருமணத்திற்கு எதிராக பல்வேறு சதி திட்டங்களை தீட்டி வருகிறார்.

மேலும் குணசேகரன் தன்னுடைய தொழிலின் போட்டியாளராக நினைக்கக்கூடிய எஸ் கே ஆர் குடும்பத்தை எப்படியாவது இதன் மூலம் பழி தீர்த்துக் கொள்ள திட்டம் தீட்டியுள்ளார். குடும்பத்தில் உள்ள அனைவரையும் மட்டம் தட்டி பேசி வருவதோடு மட்டுமல்லாமல் தான் என்ற அகங்காரத்தில் ஆடி வருகிறார். கரிகாலனோடு தான் ஆதிராவிற்கு திருமணம் என்றும் இதனை யாராலும் மாற்ற முடியாது என்பது போல் தெரிவித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து இதுவரையிலும் குணசேகரன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் மிரட்டியே தனது காரியத்தை எல்லாம் சாதித்து வந்துள்ளார். ஆனால் இனிமேல் குணசேகரின் பேச்சு எடுபடாது என்பது போல் சக்தி ஆதிராவிற்கு உறுதிமொழி கொடுத்துள்ளார். அதற்கு ஏற்றார் போலவே ஜாதகம் பார்த்த இடத்திலும் இனிமேல் குணசேகரனுக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கன்னிவெடி தான் என்பது போல்பெரிய குண்டையே தூக்கிப் போட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் குணசேகரனின் கொட்டத்தை அடக்க சக்தி முழு முயற்சியில் இறங்கி இருப்பது போல் தெரிகிறது. மேலும் குடும்பத்தில் கரிகாலனுக்கு எதிராக புது பிரச்சனையானது கிளம்பியுள்ளது. குணசேகரன் இவற்றையெல்லாம் எப்படி சமாளித்து ஆதிராவின் திருமணத்தை நடத்தப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →