புதன்கிழமை, ஜனவரி 1, 2025

நிலாவுக்கு நீங்க தாத்தா தான், வெறுப்பான கோபி.. பாக்யாவை போல் கொடுமையில் சிக்கிய மருமகள்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் திருமணம் ஆகி கணவரை இழந்த அமிர்தா, கைக்குழந்தை நிலாவுடன் இருப்பது தெரிந்தும் அவரை எழில் மனதார காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு பாக்யாவை தவிர வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் எதிர்த்த நிலையில், எழில் கடைசியில் அமிர்தாவை கரம் பிடித்தார்.

இப்போது நிலாவை கோபி வீட்டிற்கு ராமமூர்த்தி கொண்டு செல்கிறார். அங்கு இனியா, நிலாவிற்கு கோபி தாத்தா முறை வேண்டும் என்று சொல்கிறார். இதை கேட்டதும் கோபி, ‘நான் தாத்தாவா!’ என்று அதை ஏற்க மறுக்கிறார். நீங்கள் நிலாவிற்கு தாத்தா தான் என்று அங்கு இருப்பவர்கள் கிண்டல் செய்ய, வெறுப்பான கோபி வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

Also Read: இரண்டே வாரத்தில் உயிரை விட்ட சித்தப்பு.. கதறும் 4 மகள்கள், மகாநதி சீரியலில் நடந்த எதிர்பார்த்த ட்விஸ்ட்

கோபி மனதில் அவரை இளவட்டம் போல் நினைத்துக் கொண்டதால் தான், கல்லூரி காதலியை கொஞ்சம் கூட கவலை இல்லாமல் 50 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இப்படிப்பட்ட புது மாப்பிள்ளையை தாத்தா என்று சொன்னால் சுர்ருனு ஏறாதா! மறுபுறம் பாக்கியலட்சுமி குடும்பத்தில் புதிதாக வந்த மருமகளை ஈஸ்வரி உருட்டுகிறார்.

பாக்யா வீட்டில் இல்லாததால் அமிர்தா ஈஸ்வரிக்கு காபி கொண்டு போய் கொடுக்கிறார். உடனே ஈஸ்வரி, ‘உன்னை என் பக்கமே வரக்கூடாது என்று சொல்லி இருக்கிறேனே! எதற்கு என் கண்முன் நிற்கிறாய்’ என்று டீ டம்ளரை விட்டு எறிகிறார்.

Also Read: காந்தாரா படத்தை வைத்து ஓட்டியதால் விலகும் சீரியல் பிரபலம்.. விஜய் டிவி டிஆர்பி-க்கு வைத்த பெரிய ஆப்பு

பத்ரகாளியாக தாண்டவம் ஆடும் ஈஸ்வரி அமிர்தாவை பார்த்ததும் கோபத்தில் கொந்தளிக்கிறார். அதன் பிறகு வந்த எழில், அதிர்ச்சியில் உறைந்து போன அமிர்தாவை கூட்டிக்கொண்டு உள்ளே செல்கிறார். ஆனால் பாக்யாவின் மூத்த மருமகள் ஜெனிக்கு இதெல்லாம் பழகிப்போச்சு.

ஏனென்றால் அவரும் திருமணம் ஆகி மருமகளாக வந்த போது இந்த பாட்டி இப்படி தான் செய்தது. ஆகையால் அவர் திட்டுவதை எல்லாம் வாங்கி தோளில் போட்டுட்டு போயிடனும் என்று அசால்ட்டு காட்டுகிறார். இருப்பினும் அமிர்தாவை பார்க்கும் போது கிழவிக்கு கொடுமைப்படுத்த இன்னொரு பாக்யா கிடைச்சிருச்சு என்று சீரியலை பார்க்கும் ரசிகர்கள் கிண்டல் செய்கின்றனர்.

Also Read: காதலர் தினத்திற்கு படுமோசமான புகைப்படம் வெளியிட்ட தர்ஷா.. அடுத்த சன்னி லியோன் நீங்க தான்

Trending News