குடும்ப மானத்தை குழி தோண்டி புதைக்கும் மருமகள்.. பாண்டியன் ஸ்டோர்ஸை ரணகளமாக்கிய மீனா

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 4 அண்ணன் தம்பிகளின் பாசப்பிணைப்பை அழகாக காண்பிப்பதால் இந்த சீரியலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதிலும் தங்குவதற்கு வீடு இல்லாத சூழலிலும் கூட நான்கு பேரும் பிரியாமல் தங்கள் மனைவிகளுடன் சிறிய வீட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

எப்போதுமே சண்டை சச்சரவு சூழ்ச்சிகள் நிறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், தற்போது காமெடி ட்ராக்கில் சென்று கொண்டிருக்கிறது. இதில் பல வருடங்களாக குழந்தை இல்லாத முல்லை கர்ப்பமாக இருக்கிறார். இவரைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் கண்ணனின் மனைவி ஐஸ்வர்யாவும் கருத்தரித்திருக்கிறார்.

இதுவும் பத்தாது என்று மூத்த மருமகள் தனமும் தற்போது கர்ப்பமாக இருப்பது சீரியலில் அதிரடி ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தனத்திற்கு பாண்டியன் என்ற குழந்தை இருப்பதால் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆகி உள்ளார். இதைப் பற்றி தனம் வீட்டில் இருப்பவர்களிடம் தெரிவிக்க சங்கடப்படுகிறார். ஏனென்றால் இளைய கொழுந்தனின் மனைவியும் தானும் ஒரே சமயத்தில் கர்ப்பமாக இருப்பது அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் தனத்தின் அண்ணன் இதைப் பற்றி வீட்டில் இருப்பவர்களிடம் போட்டு உடைத்து விட்டார். பிறகு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் இந்த விஷயத்தை கேட்டு சந்தோஷப்பட்டனர். ஆனால் தனத்திற்கு கொஞ்சம் கூச்சமாக இருப்பதால், ஓரமாக பொய் ஒளிந்து உட்கார்ந்து கொள்கிறார். அதை கூட புரிந்து கொள்ளாத மீனா, தனத்தை பயங்கரமாக கலாய்க்கிறார்.

‘ஒரே வீட்டில் தனி அறை கூட இல்லாத போது மாத்து கட்டுல மாசமா இருக்கீங்களே! பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் பாரம்பரியம், பெருமை, கலாச்சாரம் எல்லாம் இதன் மூலமே தெரிந்து விட்டது. இதெல்லாம் எப்படி நடந்தது என்று நானே கண்டுபிடிக்கிறேன்’ என்று குடும்ப மானத்தை கப்பலேற்றும் அளவுக்கு சீரியலில் ரணகளம் செய்தார் மீனா.

இப்படி அடுத்தடுத்து வயது வித்தியாசம் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸில் இருக்கும் மூன்று மருமகளும் கர்ப்பமாக இருப்பது சந்தோசமான விஷயம் என்றாலும், மீனா மட்டும்தான் இன்னும் மிச்சம். அவரும் கர்ப்பமாகிவிட்டால் ஒரே சமயத்தில் 4 மருமகளும் வயிற்றை தள்ளிக்கிட்டு இருப்பாங்க என்று சின்னத்திரை ரசிகர்கள் இந்த சீரியலை குறித்து விமர்சிக்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →