சினிமாவில் நடிக்க வந்து விட்டாலே ஹீரோயின்கள் முதல் துணை நடிகைகள் வரை பலரும் ஏராளமான டார்ச்சர்களை அனுபவித்து வருகின்றனர். அதில் பல திரைப்படங்களில் அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகைக்கு தயாரிப்பாளர் ஒருவர் அந்தரங்க டார்ச்சர் கொடுத்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பல வெற்றி படங்களை தயாரித்திருக்கும் அந்த பிரபலம் தன் படத்தில் நடித்த நடிகை ஒருவரின் மேல் ஆசைப்பட்டு இருக்கிறார். இத்தனைக்கும் அந்த தயாரிப்பாளருக்கு திருமணம் ஆகி பிள்ளை குட்டிகள் இருக்கிறது. ஆனாலும் அவர் அந்த அம்மா நடிகைக்கு பல விதங்களில் டார்ச்சர் கொடுத்து இருக்கிறார்.
Also read: சீரியலுக்கு போய் சீரழிந்த ரக்சனின் எக்ஸ் காதலி.. நடிக்க தெரிஞ்சும் கழட்டிவிட்ட பிரபல சேனல்
இதில் என்ன கொடுமை என்றால் அந்த நடிகைக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இது எல்லாம் தெரிந்தும் கூட அந்த தயாரிப்பாளர் நடிகையை தன் வலையில் சிக்க வைக்க பெரும் முயற்சியை செய்து இருக்கிறார். அதற்காக சில தகடு தத்த வேலைகளையும் அவர் பார்த்து இருக்கிறார்.
ஒருமுறை நடிகையின் முக்கியமான பொருள் ஒன்றை எடுத்து மறைத்து வைத்த தயாரிப்பாளர் அதை தன்னுடைய இடத்திற்கு நேரில் வந்து வாங்கிக்கொள் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தன் ஆசைக்கு இணங்காத அந்த நடிகையை நிரந்தரமாக காலி செய்யும் வேலையையும் அவர் பார்த்திருக்கிறார்.
இப்படி தொடர் டார்ச்சர்களால் அவதிப்பட்டு வந்த அந்த நடிகை இப்போது மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு சொந்த ஊருக்கே சென்று விட்டாராம். பொருளாதார தேவைக்காக நடிக்க வந்த அந்த நடிகை இப்போது கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று நடிப்புக்கே முழுக்கு போடும் முடிவில் இருக்கிறார். இப்படி நடிகையை விடாமல் டார்ச்சர் செய்த அந்த தயாரிப்பாளர் சமூகத்தில் நல்லவர் வேடத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
Also read: வாய்ப்பு தருவதாக நடிகைகளிடம் உல்லாசமாக இருந்த நடிகர்.. மொத்தத்தையும் இழந்து நடுரோட்டுக்கு வந்த சோகம்