விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பல போராட்டத்திற்குப் பிறகு எழில் அமிர்தாவின் காதல் திருமணத்தை பாக்யா வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இதன் பிறகு கோபியின் மாமியார் ஈஸ்வரிக்கு எழில் மற்றும் அமிர்தா இருவரும் வீட்டில் இருப்பது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.
ஆனால் பாக்யாதான் இதையெல்லாம் சமாளித்து வருகிறார். இந்த சூழலில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பாக்யாவின் மகள் இனியா, நன்கு படிக்க வேண்டும் என்பதற்காக அவரை டியூசனின் சேர்த்து விட்டனர். ஆனால் டியூஷனில் புதிதாக என்ட்ரி கொடுத்த சரண் என்கின்ற ஹேண்ட்சம் பாயுடன் இனியாவிற்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
Also Read: மொத்த குடும்பத்தையும் ஒத்த ஆளா தாங்கும் மருமகள்.. தனத்துக்கே பயங்கர டஃப் கொடுக்கும் மீனா
டியூசன் முடிந்தபின் வீட்டிற்கு வந்த இனியா படிக்காமல் புத்தகத்திற்குள் செல்போனை மறைத்துக் கொண்டு சரணுடன் சேட் செய்கிறார். இதை கண்டுபிடித்து ராதிகா இனியாவை திட்டுகிறார். ‘நீங்க யாரு இதெல்லாம் கேக்குறதுக்கு’ என்று எடுத்தெறிந்து இனியா பேசியதும் ராதிகாவிற்கு கோபம் வந்துவிட்டது.
இதன் பிறகு இவர்களுக்கிடையே சக்காளத்தி சண்டையை விட மோசமாக சண்டை ஏற்படுகிறது. அவர்களை சமாதானப்படுத்த கோபி முயற்சித்தாலும் இருவரும் கீரியும் பாம்புமாய் சீருகின்றனர். ஆனால் ராதிகா தன்னுடைய மகள் போலவே இனியாவையும் பார்க்கிறார்.
Also Read: சீரியலுக்கு போய் சீரழிந்த ரக்சனின் எக்ஸ் காதலி.. நடிக்க தெரிஞ்சும் கழட்டிவிட்ட பிரபல சேனல்
இதைப் புரிந்து கொள்ளாத இனியா, அப்பாவின் இரண்டாவது மனைவி ராதிகா, எப்படி தன்னுடைய தவறை சுட்டிக்காட்டுவது என வயதுக்கு மீறிய பேச்சு பேசுகிறார். இதையெல்லாம் பார்க்கும் போது 50 வயதில் கல்லூரி காதலியை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கோபியின் வாரிசு என்பதை இனியா நிரூபித்திருக்கிறார்.
இதன் பிறகு பாக்யாவிற்கு இனியாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு செம டோஸ் கொடுக்கப் போகிறார். அப்போதுதான் இந்த குண்டு பூசணிக்காய் இனியாவிற்கு அறிவு வரும் என்று சோசியல் மீடியாவில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Also Read: குடும்ப மானத்தை குழி தோண்டி புதைக்கும் மருமகள்.. பாண்டியன் ஸ்டோர்ஸை ரணகளமாக்கிய மீனா