டாப் ஹீரோவாக இருந்தாலும் தொடர்ந்து 6,7 படங்கள் தோல்வி படங்களாக கொடுத்தால் அவர்களது மார்க்கெட் அதல பாதாளத்திற்கு சென்றுவிடும். அப்படிதான் விக்ரம் தொடர் தோல்வி படங்களை கொடுத்து வருவதால் தற்போது தங்கலான் படம் வெற்றியை கொடுக்க வேண்டும் என முழு வீச்சில் செயல்பட்ட வருகிறார்.
இப்போது விக்ரமுக்கு ஏற்பட்ட நிலை முன்பே விஜய்க்கு ஏற்பட்டு விட்டது. அதிலிருந்து ஒரு மாஸ் வெற்றி படம் கொடுத்து தனது அந்தஸ்தை தளபதி தக்க வைத்துக் கொண்டார். அதாவது விஜய் மற்றும் அஜித் வளர்ந்து வந்து கொண்டிருந்த சமயம் அது. இவர்கள் இருவருமே மாறி மாறி ஹிட் படங்களை கொடுத்து வந்தனர்.
அந்த சமயத்தில் விஜய்க்கு தொடர் பல படங்கள் ஃபெயிலியர் ஆகி கேரியரே போகும் அளவிற்கு மோசமாகிவிட்டது. போக்கிரி படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்தார். அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, காவலன், வேலாயுதம் என 2007 இல் இருந்து 2011 வரை விஜய் தோல்வி படங்களை கொடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஒரு ஹிட் படம் கூட கொடுக்காததால் தளபதியின் நிலைமை படுமோசமாக மாறியது. ஆனால் 2012 இல் இருந்து தான் விஜய்க்கு விடிவு காலம் பிறந்தது. ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்தை ஷங்கர் விஜய் வைத்து நண்பன் என்ற பெயரில் எடுத்திருந்தார். இந்த படம் ஓரளவு நல்ல வெற்றியை கொடுத்தது.
Also Read : மூன்று ஹீரோக்களுக்காக பின்னணி பாடல் பாடிய விஜய்.. 23 வருடத்திற்கு முன் பட்டி தொட்டி எங்கும் ஒலித்த பாடல்
ஆனாலும் இதே ஆண்டு வெளியான துப்பாக்கி படம் தான் அந்த ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படம் என்ற பெயரை தட்டி சென்றது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். அதுவரை விஜய்யை அப்படி பார்த்திடாதவாறு ஸ்டைலிஷ் ஆக முருகதாஸ் காட்டி இருந்தார்.
மேலும் துப்பாக்கி படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்கள் என அனைத்துமே ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. இப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்து மாபெரும் வெற்றி பெற்றது. அது மட்டும் இன்றி விஜய்யின் முதல் 100 கோடி வசூல் படமும் துப்பாக்கி தான். இதிலிருந்து தான் விஜய் அடுத்த நிலைக்கு சென்றார்.
Also Read : காஷ்மீர் குளிரால் நொந்து போன லியோ டீம்.. உறைய வைக்கும் பனியிலும் விஜய் செய்யும் அலப்பறைகள்