குணசேகரனுக்கு எதிராக கொளுத்தி போட்ட அப்பத்தா.. எதிர் நீச்சலில் அடுத்து நடக்க போகும் சம்பவம்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் ஆனது பெண்களை மட்டுமல்லாமல், குடும்பத்தில் உள்ள அனைவரையுமே கவர்ந்திழுக்க கூடிய வகையில் அமைந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் தொடர்ந்து முதல் இடத்தை பிடித்து வருகிறது. படித்த பெண்களை அடிமையாக்கி தனது அகங்காரத்தில் ஆடிக்கொண்டிருக்கும் குணசேகரனுக்கு எதிராக ரசிகர்கள் மத்தியில் பல்வேறு எதிர்ப்புகள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து எஸ் கே ஆரின் மனைவி சாரு பாலாவின் மீது உள்ள கோபத்தினை படித்த பெண்களின் மீது திணித்துள்ளார். லட்சியத்தோடு இருந்த படித்த பெண்களை மருமகளாக கொண்டு வந்து வீட்டு வேலை செய்யும் அடிமைகளாக மாற்றியுள்ளார். இந்நிலையில் குடும்பம், பாரம்பரியம் என இன்னும் அந்த காலத்து நடைமுறையில் வாழ்ந்து வரும் குணசேகரன் பெண்களின் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார்.

இவற்றையெல்லாம் குடும்பத்தில் ஒருவராக இருந்து வந்த குணசேகரன் உடைய  அப்பத்தா இந்த குடும்பத்தில் எப்பொழுதுதான் மாற்றம் வரும் என்று பொறுமை காத்து வந்தார். அதிலும் குறிப்பாக வீட்டில் உள்ள பெண்களுக்கு முழு சுதந்திரமும், பேச்சுரிமையும் எந்த ஒரு மாற்றத்தினால் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்.

இந்நிலையில் குணசேகரன் குடும்பத்திற்கு எதிராக ஒரு பிரச்சனையில் உள்ள நியாயத்தினை தைரியமாக வெளிப்படுத்துபவர் ஆக இருந்தவர்தான் ஜனனி. எல்லா விதத்திலும் இவருக்கு பதிலடி கொடுத்து வந்த நிலையில் சக்தியின் மூலமே ஜனனி வீட்டை விட்டு அனுப்பப்பட்டார். இதனால் அப்பொழுது அப்பத்தா தைரியமாக தனது நியாயத்தை வெளிப்படுத்தும் வீட்டின் மூன்றாவது மருமகளை குணசேகரனுக்கு எதிராக களத்தில் இறக்க முடிவெடுத்தார். 

மேலும் ஜனனியை வைத்து தனது ஆட்டத்தை தொடங்க ஆரம்பித்தார். பெண்களும் சம உரிமை பெற வேண்டும் என குணசேகரனுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார் அப்பத்தா. இதனைத் தொடர்ந்து  இவர் கொளுத்தி போட்ட நெருப்பானது குடும்பமே இரண்டாக உடையும் அளவிற்கு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆதிராவின் திருமண விஷயத்தின் மூலம்  எதிர்நீச்சல் குடும்பம் இரண்டு அணிகளாக உடைந்துள்ளது.

குடும்பத்தில் உள்ள சக்தி மற்றும் ஞானசேகருக்கு அண்ணனின் சுயரூபம் தெரிந்த நிலையில் தற்பொழுது சுயமாக சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். அதிலும் குடும்பத்தில் உள்ள மருமகள்கள் இவருக்கு எதிராக பெரும் சம்பவத்தை நடத்தி முகத்தில் கரியை பூசும் அளவிற்கு திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர். இனி குணசேகரனின் கெதி அதோ கெதி தான் என்பது போல், ஓவர் ஆட்டம் போட்டால் இதுதான் நிலைமை என்று விமர்சகர்கள் கமெண்ட் அடித்து  வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →