வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

16 வருடத்திற்கு பின் மீண்டும் ஹீரோவாகும் முரட்டு வில்லன்.. லோகேஷ் கொடுத்த சான்ஸால் அடித்த ஜாக்பாட்

மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

இதில் விஜய்க்கு வில்லனாக ஏகப்பட்ட பிரபலங்களை களம் இறக்க லோகேஷ் முடிவெடுத்து இருக்கிறார். இதற்காக பாலிவுட்டில் இருந்து சஞ்சய் தத்-தையும் கோலிவுட்டில் இருந்து அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோரை தேர்ந்தெடுத்துள்ளார். இன்னும் மலையாளம் மற்றும் தெலுங்கில் இருந்தும் பிரபலங்களை தரையிறக்கி லியோ படத்தை பான் இந்தியா படமாக வெளியிடுவது தான் லோகேஷின் திட்டம்.

Also Read: அதிக எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய 9 பான் இந்தியா படங்கள்.. லியோ உடன் போட்டி போடும் சூர்யா

இதனால் இந்த படத்திற்கு அனைத்து மொழிகளில் இருந்து, ரசிகர்களுக்கு பரிச்சயமான பிரபலங்களை இணைத்துள்ளனர். அதிலும் தமிழில் முரட்டு வில்லனாக மன்சூர் அலிகானுக்கு லியோ படத்தில் கொடுத்த வாய்ப்பின் காரணமாக, அவர் 16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

மன்சூர் அலிகான் 90-களில் தமிழ் சினிமாவில் வில்லனாக முரட்டிவிட்ட முன்னணி நடிகர். ஆனால் இவர் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். 1993 ஆம் ஆண்டு வெளியான காத்தவராய கிருஷ்ண காமராஜன் என்ற படம் தான் மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம். அதன் பிறகு 1994-ல் ராவணன், சிந்துபாத் போன்ற படங்களிலும் ஹீரோவாக நடித்து மாபெரும் ஹிட் கொடுத்தார்.

Also Read: திரிஷாவுக்கு எச்சரிக்கை விடுத்த குடும்பம்.. லியோ படப்பிடிப்பில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

பிறகு 1996 ஆம் ஆண்டு வாழ்க ஜனநாயகம் படத்திலும், அதன் பின் 2002-ல் ஆண்டிப்பட்டி அரசம்பட்டி என்ற படத்தில் பாண்டியராஜ் மற்றும் மன்சூர் அலிகான் இருவரும் கதாநாயகனாக நடித்திருப்பார்கள். பிறகு கடைசியாக 2007 ஆம் ஆண்டு என்னைப்பார் யோகம் வரும் என்ற படத்திலும் ஹீரோவாக மன்சூர் அலிகான் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தார்.

இதன்பின் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மன்சூர் அலிகான் சரக்கு என்ற படத்தில் கதாநாயகனாக ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் இணைந்து நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கப்பட்டிருக்கிறது. படத்தை ஜெ ஜெயகுமார் இயக்க, அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் விபின் படத்திற்கு இசையமைக்கிறார்.

Also Read: இரண்டு பேரை கண்மூடித்தனமாக நம்பும் விஜய்.. இமையைக் காக்கும் கண்கள் போல் செயல்படும் செல்ல பிள்ளைகள்

இத்தனை வருடத்திற்குப் பிறகு மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு லியோ படத்தில் லோகேஷ் கொடுத்த வாய்ப்பு தான் முழு காரணம். மேலும் பல வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்த மன்சூர் அலிகான், இப்போது வரிசையாக அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகிறார். ஆகையால் லியோ படத்தில் லோகேஷ் கொடுத்த சான்ஸ் அவருக்கு கிடைத்த பெரிய ஜாக்பாட்.

Trending News