விஜய் டிவி புகழ், பாலா செய்த அட்டகாசத்தால்.. சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கர்

சமீபத்தில் யூடியூப் மூலமாக ஒவ்வொருவருக்கும் இருக்கும் திறமைகளை பதிவிட்டு அதன்மூலம் பிரபலமாகி வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து அவர்கள் ஹோம் டூர் வீடியோ எடுத்து வீட்டில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் தெளிவாக காட்டி வருகிறார்கள். அதனால் சிலர் பிரச்சனைகளிலும் மாட்டிக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் ரோபோ சங்கர் வீட்டுக்கு விஜய் டிவி புகழ் மற்றும் பாலா சென்றிருக்கிறார்கள். பின்பு அவர் ஹோம் டூர் மூலமாக அவரது வீட்டை சுற்றி எடுக்கப்பட்டு ஒவ்வொரு விஷயங்களையும் சேனலில் போட்டு உள்ளனர். அப்படித்தான் ரோபோ சங்கர் வீட்டில் இரண்டு கிளி இருப்பதை எதார்த்தமாக வீடியோ எடுக்கப்பட்டு வெளியிட்டார்கள்.

Also read: நாங்களே அன்றாடம் காட்சி இவ்வளவு பைன் போட்டா எப்படி சார்.? பாசத்தை தொலைத்து கதறும் ரோபோ சங்கர்

இந்த வீடியோவை பார்த்த வனவிலங்கு அதிகாரிகள் அதில் இருக்கும் கிளியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதாவது அந்த கிளி எந்த வகையானது என்றால் அலெக்ஸாண்டரின் கிளி என வகைப்படும். அந்த கிளி யாரும் அனுமதியில்லாமல் வீட்டில் வளர்க்கக்கூடாது என்றும் அது சட்டத்துக்கு விரோதமான செயல் என்றும் கூறியுள்ளனர்.

அதனால் வனத்துறையினர் ரோபோ சங்கர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அப்பொழுது அங்கே அவர் வீட்டில் இல்லை என்றும் அவர் வெளிநாடு போயிருப்பதால் அங்கிருந்த இரண்டு கிளிகளை பறிமுதல் செய்தனர். இதை கேள்விப்பட்ட அவர் உடனடியாக வெளிநாட்டிலிருந்து வந்து வனத்துறையினரிடம் பேசி உள்ளார். ஆனால் வனத்துறையினர் முடியவே முடியாது இதை நீங்கள் வீட்டில் வளர்க்க கூடாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார்கள்.

Also read: காதல் மனைவியை கரம் பிடித்த விஜய் டிவி புகழ்.. காட்டுத் தீயாய் பரவும் திருமண புகைப்படங்கள்

இதனால் ரோபோ சங்கருக்கு 2 1/2 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். ஏனென்றால் இந்த கிளியை வீட்டில் அடைத்து வைத்து வளர்க்க கூடாது. அதன் மூலமாக பல நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அந்த கிளியை சுதந்திரமாக மட்டுமே வைத்து வளர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இது எல்லாத்துக்கும் காரணம் விஜய் டிவி புகழ் மற்றும் பாலா தான். தேவையில்லாமல் ரோபோ சங்கர் வீட்டிற்கு சென்று அந்தக் கிளியை வீடியோ எடுத்து வெளியிட்டதனால் இப்பொழுது ரோபோ சங்கர் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு அபராதத்தையும் கட்டி உள்ளார். இது தெரியாம பாலா இந்த கிளியை எனக்கும் தருவீங்களா என்று கேட்டிருக்கிறார்.

Also read: ரோபோ சங்கரின் ஸ்டேட்டஜியை பின்பற்றும் போஸ் வெங்கட்.. இணையத்தைக் கலக்கும் புகைப்படம்!