வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

90 கிட்ஸ் பார்த்து நடுங்கிய 6 வில்லன்கள்.. மகளுக்கு எமனாக மாறிய காதல் தண்டபாணி 

சினிமாவை பொறுத்த வரையிலும் டாப் ஹீரோக்களின் படங்களில்  வெற்றிக்குப் பின்னால், வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களும் முக்கிய இடம் பெறுகின்றனர். அந்த வகையில் 90ஸ் காலகட்டத்தில் தாங்கள் நடித்த படங்களின் மூலம் சினிமாவில் கொடூரமான வில்லத்தனத்தால் மாஸ் காட்டிய 6 வில்லன்களை பற்றி இங்கு காணலாம்.

மொட்ட ராஜேந்திரன்: இயக்குனர் பாலா இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு ஆர்யா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான  திரைப்படம் நான் கடவுள். இப்படத்தில் ஆர்யா, பூஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் மொட்ட ராஜேந்திரன் தாண்டவன் என்னும் கொடூர மனம் படைத்த கதாபாத்திரத்தில் தனது அசாத்திய திறமையால் மிரட்டி இருப்பார்.

Also Read: அரச்ச மாவையே அரச்ச கதையில் 5 நகைச்சுவை படங்கள்.. ஆர்யா, ஜீவாக்கு செட்டானது, கொஞ்சம் கூட செட்டாகாத விஷால்

பசுபதி: 2009 ஆம் ஆண்டு இயக்குனர் தரணி இயக்கத்தில் விக்ரம் உடன் ஜோதிகா ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படம் தூள். இதில் பசுபதி ரவுடி கும்பலின் தலைவியாக இருக்கக்கூடிய சொர்ணாக்காவின் தம்பியாக, ஆதி என்னும் கதாபாத்திரத்தில் மாஸ் காட்டி இருப்பார்.

ஆனந்தராஜ்: 1995 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நக்மா ஜோடி சேர்ந்து நடித்த படம் பாட்ஷா. இப்படம் கேங்ஸ்டர் கதை அம்சத்தைக் கொண்டு வெளிவந்தது. படத்தில் ஆனந்தராஜ் ஏரியாவில் அட்டூழியம் செய்யும் ரவுடி கும்பலின் தலைவனாக இந்திரன் என்னும் கதாபாத்திரத்தில் தனது கொடூரத்தனத்தை காட்டி இருப்பார்.

Also Read: கம்பீரத்தை விட்டுக்கொடுக்காமல் மிரட்டுய 5 நடிகர்கள்.. அதிலும் சார்பட்டா ரங்கன் வாத்தியாரே அடிச்சுக்க ஆளே இல்ல

மன்சூர் அலிகான்: 1991 ஆம் ஆண்டு விஜயகாந்த், ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த திரைப்படம் கேப்டன் பிரபாகரன். இதில் மன்சூர் அலிகான் வீரப்பன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் போலீஸ்க்கே தண்ணி காட்டும் தனது வில்லத்தனமான நடிப்பின் மூலம் மிரட்டி இருப்பார். 

கோட்டா சீனிவாச ராவ்: 2003 ஆம் ஆண்டு விக்ரம், திரிஷா இணைந்து நடித்த திரைப்படம் சாமி. இதில் கோட்ட சீனிவாச ராவ் பெருமாள் பிச்சை என்னும் அரசியல்வாதியாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி படத்திலும் ரவுடி கும்பலின் தலைவனாக சனியன் சகடை என்னும்  கதாபாத்திரத்தில் தனது வில்லத்தனத்தை காட்டியுள்ளார்.

தண்டபாணி: 2004 ஆம் ஆண்டு பரத், சந்தியா ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படம் காதல். இதில் தண்டபாணி ராஜேந்திரன் எனும் கதாபாத்திரத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்துள்ளார்.  இப்படத்தில் இவர் தனது மகளின் காதலுக்கு எமனாக மாறி தனது கொடூரத்தனத்தை காட்டியிருப்பார்.

Also Read: மன்சூர் அலிகானுக்கு இவ்வளவு அழகான மகளா? தங்கச் சிலை மாதிரி இருக்காங்க!

Trending News