சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

21 வயதிலேயே கிடைத்த முன்னணி அந்தஸ்து.. கர்வம், பெண்கள் சகவாசத்தால் தடம் தெரியாமல் அழிந்த நடிகர்

ஒரு காலத்தில் பெண் ரசிகைகளின் மனதை கொள்ளை கொண்ட ஒரு சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான் அந்த ஹீரோ. முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கொடுத்த அந்த நடிகரை தேடி அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இத்தனைக்கும் 21 வயதிலேயே அவர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

மீசைக்கார தயாரிப்பாளரின் படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக தான் அவர் அறிமுகமானார். ஆனால் அவரின் நல்ல நேரம் அந்த படத்திற்குப் பிறகு அவர் வருடத்திற்கு 10 படங்களுக்கு மேல் கமிட்டாகி பிஸியாக நடிக்க ஆரம்பித்தார். இப்படி ஏறு முகத்தில் சென்று கொண்ட அந்த நடிகருக்கு கொஞ்சம் கொஞ்சமாக கர்வம் தலை தூக்க ஆரம்பித்தது.

Also read: அக்கட தேசத்துக்கு சென்று மோசம் போன நடிகை.. உல்லாசமாக இருந்து விட்டு கழட்டிவிட்ட நடிகர்

முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக வளர ஆரம்பித்த அந்த நடிகர் சம்பள விஷயத்தில் கொஞ்சம் கெடுபிடி காட்ட ஆரம்பித்திருக்கிறார். அதாவது அதிகபட்ச சம்பளம் கேட்பது, படங்களில் நடிப்பதற்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுவது என்று கொஞ்சம் ஓவராகவே அவர் ஆட்டம் போட்டிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்ததும் அவருக்கு கெட்ட சகவாசமும் பெருகி இருக்கிறது. அதனால் அவர் படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு கேளிக்கை கூத்துகளில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இதற்கு இடையில் சில வருடங்களுக்கு முன்பு நம்பர் ஒன் ஹீரோயினாக கொடி கட்டி பறந்த நடிகையுடனும் அவர் காதலில் கிசுகிசுக்கப்பட்டார்.

இப்படி மொத்தமாக அவர் பெயர் டேமேஜ் ஆக ஆரம்பித்தது. அதன் காரணமாக ஹீரோவாக இருந்த அவர் செகண்ட் ஹீரோ இடத்திற்கு தள்ளப்பட்டார். அதை தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது எந்த வாய்ப்புகளும் இல்லாத அவர் சொந்த நாட்டை காலி செய்துவிட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். இப்படி ஆணவத்தால் அழிந்த அந்த நடிகர் இப்போது இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறார்.

Also read: செலிபிரிட்டி என்ற பெயரில் அந்தரங்க இடத்தை தொட்றாங்க.. கேவலமான செயலால் மீடியாவை வெறுத்த நடிகை

Trending News