வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பிரபல சேனலை ஒரேடியாக ஓரம் கட்டிய சன் டிவி.. டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 10 சீரியல்கள்

ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாட்களிலும் சின்னத்திரை சீரியல்களில் எந்த சீரியல் ஆனது ரசிகர்களின் மத்தியில் அதிக கவனத்தைப் ஈர்த்துள்ளது, என்பது அந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்டானது வெளியாகி இணையத்தில் மாஸ் காட்டி வருகிறது.

இதில் 10-வது இடத்தில் பாரதி கண்ணம்மா சீரியலும், 9-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும், 8-வது இடத்தில் ஆனந்த ராகம் சீரியலும், 7-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும் இடம் பிடித்துள்ளது.

சுந்தரி: இந்த சீரியலில் கார்த்திக், அணு உடைய விவகாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோவில் அர்ச்சகருக்கு இந்த விஷயம் தெரிந்துள்ள நிலையில் குடும்பத்தில் பெரும் பூகம்பமே வெடிக்க தொடங்கியுள்ளது. இவற்றையெல்லாம் கார்த்தி எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சுந்தரி சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் பின்னுக்கு தள்ளப்பட்ட நிலையில் 6-வது இடத்தை பிடித்துள்ளது.

Also Read: கயல் முதல் பாக்கியலட்சுமி வரை.. இளசுகளின் இஷ்டமான டாப் 5 சின்னத்திரை நடிகைகள்

கண்ணான கண்ணே: இந்த சீரியலில் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மீரா, மேனகாவின் ஆட்டத்திற்கு எதிராக தக்க பதிலடி கொடுத்துள்ளார். கௌதம் உடைய குடும்ப சொத்துக்களை எல்லாம் மீட்ட நிலையில் அப்பாவும், மகளும் எப்பொழுது ஒன்று சேர்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். கண்ணான கண்ணே சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 5-வது இடத்தில் உள்ளது. 

இனியா: இந்த சீரியலில் விக்ரமுடைய அத்தைகள் எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் என்ற குறிக்கோளில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் யாழினியை சதி திட்டம் போட்டு ரவுடிகள் மூலம் கடத்தியுள்ளனர். இந்நிலையில் தனது அக்காவை இனியா எப்படி கண்டுபிடிக்க போகிறார் என்ற பரபரப்பான கட்டத்தில் நகர்ந்து வருகிறது. இனியா சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் ஒரு படி முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளது.

எதிர்நீச்சல்: இந்த  சீரியலில் குடும்பத்திற்குள்ளே குணசேகரனுக்கு எதிரான ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் குடும்பத்தில் உள்ள மருமகள்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைவரும் குணசேகரனுக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ரசிகர்களின் மத்தியில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. எதிர்நீச்சல் சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 3-வது இடத்தில் உள்ளது.

Also Read: அட்வகேட்னா நிறைய பொய் சொல்லனுமே.. ஜூலியை சீரியலில் பொறுக்கி போட்ட விஜய் டிவி

வானத்தைப்போல: இந்த சீரியலில் கோமதி எப்படியாவது துளசியை தீர்த்து கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார். ஆனால் இவர் செய்த செயலின் பழியானது வெற்றியின் பக்கம் திரும்பி உள்ளது. இந்நிலையில் பொன்னி, சின்ராசுவை காதலிக்க தொடங்கியுள்ளார். பொன்னி தனது காதலை எப்பொழுது வெளிப்படுத்த போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். வானத்தைப்போல சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

கயல்: இந்த சீரியலில் கயல் தைரியமான பெண்ணாக இருந்து குடும்பத்தின் பாரங்களை சுமந்து வருகிறார். இந்நிலையில் அன்பு சூழ்நிலை கைதியாக தவறான ஒரு நபரிடம் மாட்டி உள்ளார். அதிலிருந்து எப்படி வெளியே வரப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கயல் சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

Also Read: எதிர்நீச்சல் கதாபாத்திரங்கள் வாங்கும் சம்பளத்தின் மொத்த லிஸ்ட்.. ஒரு எபிசோடுக்கு இத்தனை லட்சம் பட்ஜெட்டா

இவ்வாறு பிரபல சேனலை ஒரேடியாக ஓரம் கட்டிய நிலையில் சன் டிவி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதிலும் இனியா சீரியல் வந்த வேகத்திலேயே ரசிகர்களின் ஆதரவை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் 4-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News