வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

தேவயானியை சித்திரவதை செய்த இயக்குனர்.. உண்மையை போட்டு உடைத்த விஜயலட்சுமி

தமிழ் கதாநாயகிகான முகபாவனையை கொண்ட தேவயானி ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். அதன்பின்பு அடுத்தடுத்த பட வாய்ப்பு வர தமிழ் சினிமாவில் தேவயானி கொடி கட்டி பறந்தார். இதைத்தொடர்ந்து இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்பு பட வாய்ப்பு குறைந்ததால் சீரியல் பக்கம் சென்று விட்டார். வெள்ளி திரையில் எப்படி ஒரு ரவுண்டு வந்தாரோ அதேபோல் சின்னத்திரையிலும் பட்டையை கிளப்பினார். அவருடைய கோலங்கள் தொடர் இப்போதும் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் சினிமாவில் இயக்குனர் ஒருவரால் தேவயானி டார்ச்சர் அனுபவித்ததாக நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.

Also Read : ரஜினி மகள்களால் நகுல் எடுத்த முடிவு.. இன்று வரை ஒதுங்கி இருக்கும் தேவயானி

அதாவது சீமான் மற்றும் விஜயலட்சுமி இடையே ஆன பிரச்சனை சில வருடங்களாக போய்க் கொண்டிருக்கிறது. ஒருமுறை விஜயலட்சுமி தற்கொலை செய்ய முயன்ற வீடியோவையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்து இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை விஜயலட்சுமி வெளியிட்டுள்ளார்.

அதாவது பத்திரிக்கையாளர்கள் விஜயலட்சுமியை தொடர்பு கொண்டு சில விஷயங்களை பேசி உள்ளனராம். அதாவது விஜயலட்சுமிக்கு திருமணமாகி விட்டதாக களஞ்சியம் செய்தி பரப்பி வருகிறார் என்றும் இது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

Also Read : தேவயானி, ராஜகுமாரன் காதலில் வெடித்த பூகம்பம்.. வெறியாய் சுற்றிய நகுல்

அதற்கு பதில் அளித்த விஜயலட்சுமி எனக்கு திருமணம் நடந்திருந்தால் இன்னும் ஏன் சீமானிடம் போராடி வருகிறேன். சும்மா இது போன்ற புரளியை களஞ்சியம் கிளப்பி விட்டு வருகிறார். ஏனென்றால் சீமானின் வலது கை தான் களஞ்சியம். ஆகையால் அவரின் தூண்டுதல் பெயரால் இவ்வாறு வதந்தியை பரப்பி வருகிறார்.

மேலும் களஞ்சியம் இயக்கத்தில் பூந்தோட்டம் படத்தில் நான் நடித்திருந்தேன். அப்போது தேவயானி இடம் களஞ்சியம் செய்த டார்ச்சரை நான் கூட இருந்து பார்த்து இருக்கிறேன். மேலும் தேவயானி அந்த படத்தில் படாத பாடுபட்டதால் மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்க விரும்பவில்லை. ஆனால் தேவயானி சினிமாவில் உச்சம் தொட்டுள்ளார். களஞ்சியத்தின் கேடு கெட்ட குணத்தால் தான் இப்போது வரை வளர முடியாமல் உள்ளார் என்று விஜயலட்சுமி விலாசி உள்ளார்.

Also Read : ஐட்டம் டான்சராக இருந்த தேவயானியை மாற்றிய அந்த ஒரு கேரக்டர்.. மரண ஹிட்டடித்த படம்

Trending News