புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

லூசு மாதிரி இருந்த எஸ்ஜே சூர்யா.. வாலி உருவான கதையை புட்டு புட்டு வைக்கும் குணசேகரன்

இப்போது ட்ரெண்டிங்கில் உள்ள தொடர் என்றால் எதிர்நீச்சல் தான். அதிலும் இந்தத் தொடருக்கு என்றால் வில்லன் குணசேகரன் தான் ஹைலைட். காமெடி கலந்த வில்லத்தனத்துடன் இவருடைய நடிப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இவர் சினிமாவில் படங்களை இயக்கியுள்ளார்.

எதிர்நீச்சல் குணசேகரனின் நிஜ பெயர் ஜி மாரிமுத்து. இவர் சினிமாவுக்கு வந்த புதிதில் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின்பு இயக்குனராக சில படங்களை இயக்கிய நிலையில் நடிகனாகவும் முத்திரை பதித்தார். இப்போது சின்னத்திரையிலும் பட்டையை கிளப்பி வருகிறார்.

Also Read : பெரியப்பா குணசேகரனை மூக்கு உடைய கொடுத்த பதிலடி.. வாயடைத்து போன எதிர்நீச்சல் குடும்பம்

இவருடைய வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. எப்படி இவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யாவை பற்றி பேசிய விஷயம் தான் பெரிய அளவில் பேசப்படுகிறது. அதாவது எஸ் ஜே சூர்யா லயோலா காலேஜில் படித்து முடித்த பிறகும் வாடனிடம் பணம் கொடுத்து அங்கேயே ஹாஸ்டலில் தங்கி இருந்தாராம்.

மேலும் படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கும் எப்போதுமே நடந்து தான் வருவாராம். சட்டை எல்லாம் சுருக்கம் சுருக்கமாக போட்டு கொண்டு சாதாரணமாக இருப்பார். ஆனால் வாலி படத்தின் கதையை அஜித்திடம் சொல்லும்போது நானும் அருகில் இருந்தேன் என மாரிமுத்து கூறினார். அவர் கதையை சொல்லும் விதத்தை பார்க்கும் போது தான் நான் அசந்து போய்விட்டேன்.

Also Read : எதிர்நீச்சல் குணசேகரன் இயக்கிய 2 தரமான ஹிட் படங்கள்.. பிரசன்னாவை நடிகனாய் மாற்றிய தரமான கதை

கண்டிப்பாக இவ்வளவு பெரிய ஆளாக எஸ் ஜே சூர்யா வருவார் என்று நான் அப்போது நினைத்து கூட பார்க்கவில்லை. மேலும் வாலி படத்தின் இரட்டை அஜித் நடிக்கும்போது கேமராமேனுக்கு சில விஷயங்களை எஸ்.ஜே சூர்யா கூறியிருந்தார். அதாவது வில்லன் அஜித்தை தூரத்தில் இருந்து முழுமையாக காட்ட வேண்டும் என்றும், ஹீரோ அஜித்தை அருகில் வைத்து அழகாக காட்ட வேண்டும் என்றும் கூறினாராம்.

அப்போது ஒளிப்பதிவாளர் ஜீவா லூசு மாதிரி இருந்த எஸ் ஜே சூர்யாக்குள் இப்படி திறமையா என ஆச்சரியப்பட்டாராம். மேலும் அப்போது எஸ் ஜே சூர்யா சாதாரணமாக ஒரு மனிதனாக இருந்த நிலையில் இன்று புலியாக மாறி உள்ளான் என்று பெருமையாக இயக்குனர் மாரிமுத்து அந்த பேட்டியில் பேசி இருந்தார்.

Also Read : சின்ன விஷயத்திற்காக ரொமான்ஸ் சீனை தூக்க சொன்ன அஜித்.. எஸ்ஜே சூர்யா சொன்ன ரகசியம்

Trending News