ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

மலையாளத்தில் கிடைக்காத ஆதரவு.. தமிழ் ஆடியன்ஸை கவர்ந்த நண்பகல் நேரத்து மயக்கம்

ஜல்லிக்கட்டு, சுருளி போன்ற படைப்புகளை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் நண்பகல் நேரத்து மயக்கம். ஜனவரி 19ஆம் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி மலையாளத்தில் வெளியான இப்படத்தை மம்முட்டி தயாரித்து, நடித்திருக்கிறார். அவருடன் ரம்யா பாண்டியன், நமோ நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மலையாளத்தில் பெரிய அளவில் கவனிக்கப்படாத இந்த திரைப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. அதைத்தொடர்ந்து தற்போது தமிழ் ஆடியன்ஸின் கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த அளவுக்கு படம் வரவேற்கப்படுவதற்கான விஷயங்களைப் பற்றியும் படத்தின் விமர்சனத்தை பற்றியும் இங்கு காண்போம்.

Also read: ஒரு படம் முடிக்கிறதுக்குள்ள இவ்வளவு பிரச்சனைகளா.? பிள்ளையார் சுழி போட்ட ரஜினி

வித்தியாசமான கதைக்களங்களுக்கு எப்போதுமே வரவேற்பு கிடைக்கும். அதற்கு ஏற்ப இப்படமும் கதையோடு ஒன்றிப்போகும் வகையில் எடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. கதைப்படி குடும்பத்துடன் வேளாங்கண்ணி சென்று விட்டு வேனில் திரும்பி வரும் மம்முட்டி திடீரென ஒரு இடத்தில் வண்டியை நிறுத்த சொல்கிறார். தமிழ்நாட்டின் ஒரு ஓரத்தில் இருக்கும் அந்த கிராமத்திற்கு செல்லும் மம்முட்டி ஒரு வீட்டில் சென்று தன்னை சுந்தரம் என்று கூறுகிறார்.

இதனால் மம்முட்டியின் குடும்பம் உட்பட அந்த தமிழ் குடும்பமும் குழம்பி போகின்றது. மேலும் இறந்து போன சுந்தரத்தின் மனைவியான ரம்யா பாண்டியனும் இந்த விஷயத்தால் அதிர்ச்சி அடைகிறார். அதை தொடர்ந்து மம்முட்டி தன்னை சுந்தரமாக நினைத்துக் கொண்டு அந்த வீட்டிலேயே இருக்கிறார். அவர் எதற்காக இப்படி செய்கிறார், நடந்தது என்ன என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை.

Also read: பகாசூரன் படத்தில் நடிக்க மறுத்த அஜித் மச்சான்.. காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போன திரையுலகம்

இப்படி ஒரு மாறுபட்ட கதைகளத்துடன் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் மம்முட்டியின் நடிப்பு அசர வைக்கிறது. அதிலும் இவருக்கு இந்த படத்தில் அதிக வசனங்கள் கிடையாது. அதனாலேயே அவர் ஒவ்வொரு உணர்வையும் நடிப்பிலேயே வெளிப்படுத்தி இருக்கிறார். அவரை தொடர்ந்து ரம்யா பாண்டியன் சில காட்சிகளில் வந்தாலும் அழுத்தமான நடிப்பை கொடுத்துள்ளார்.

மேலும் பின்னணி இசை இல்லாமல் பழைய தமிழ் படங்களில் வரும் வசனங்களையும், பாடல்களையும் வைத்தே புது அனுபவத்தை கொடுத்திருக்கும் இயக்குனரின் முயற்சியை நிச்சயம் பாராட்ட வேண்டும். இப்படி படத்தில் ரசிக்கும் படியான சில விஷயங்கள் இருந்தாலும் சில இடங்களில் கதையின் ஓட்டம் மெதுவாக நகர்கிறது. அதை தவிர்த்து விட்டு பார்த்தால் நண்பகல் நேரத்து மயக்கம் நிச்சயம் ரசிகர்களை கவர்ந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இப்படம் தற்போது ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Also read: வசூல்ராஜாவை வச்சு செய்த ரிலீஸ்.. என்னடா இது தளபதி விஜய்க்கு வந்த சோதனை

- Advertisement -spot_img

Trending News