எம் ஆர் ராதா எம்ஜிஆரை இதுக்கு தான் சுட்டாரா.. உண்மையை உடைத்த ராதாரவி

‘நடிக வேள்’ எம் ஆர் ராதா வில்லாதி வில்லனாக அந்த காலத்தில் நடித்தவர். அப்போதிருந்த மற்ற வில்லன்களைப் போல் கத்திச்சண்டை, கம்பு சண்டை எல்லாம் இவர் போட்டதில்லை. வில்லத்தனத்தையே ரொம்ப ஸ்டைலாக காட்டியவர் என்று இவரை சொல்லலாம். கலைவாணர் எப்படி காமெடியில் சமூக கருத்துகளை சொன்னாரோ, அதேபோல் ராதா வில்லத்தனத்திலேயே சமூக கருத்துகளை சொல்லியவர்.

அந்த காலத்தில் முன்னணி ஹீரோக்கள் கூட எம் ஆர் ராதா உடன் நடிக்க பயந்தனர். ஒரு காட்சியில் அந்த நடிகர்கள் நினைப்பதை விட அதிகமான ரியாக்சன் கொடுத்து அவர்களையே தூக்கி சாப்பிட்டு விடுவாராம் ராதா. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூட எம் ஆர் ராதா உடன் காட்சி என்றால் கொஞ்சம் பதட்டத்துடன் தான் நடிப்பாராம். அப்படி நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார் ராதா.

Also Read: இப்பவும் நடிப்புக்கு நான் தான் ராஜா என நிரூபித்த எம் ஆர் ராதா.. நடிப்பின் அசுரன் என நிரூபித்த 5 படங்கள்

பகுத்தறிவு பேசுபவராகவும், அரசியல் பாதையில் வெவ்வேறு கருத்துக்களை கொண்டவராகவும் எம் ஆர் ராதா இருந்தாலும் தன்னுடைய சக நடிகர்களிடம் நல்ல விதமாக தான் நட்பு பாராட்டி வந்திருக்கிறார். ஆனால் இன்று வரை மக்கள் திலகம் எம்ஜிஆரை பற்றி பேசும்போதும் சரி, எம் ஆர் ராதாவை பற்றி பேசும்போதும் சரி நமக்கு முதலில் ஞாபகம் வருவது எம் ஆர் ராதா, எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்ட நிகழ்வு தான்.

1967 ஜனவரியில் எம்ஜிஆரின் ‘தாய்க்கு தலைமகன்’ ரிலீசை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் இடியென வந்த செய்தி தான் எம் ஆர் ராதா, எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்டுவிட்டார் என்பது. அப்போது எம்ஜிஆர் அனுமதிக்கப்பட்டிருந்த ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அவருடைய ரசிகர்கள் மொத்தமாக குவிந்தனர். அதே நேரத்தில் எம் ஆர் ராதாவின் வீடு அவருக்கு சம்பந்தமான இடங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.

Also Read: வெறும் 15 நாட்களில் உருவான சிவாஜியின் படம்.. மொத்த தியேட்டரையும் அதிரவைத்த எம் ஆர் ராதா

எம் ஆர் ராதா எம்ஜிஆரை தன்னுடைய கை துப்பாக்கியால் சுட்டு விட்டு தன்னைத் தானே சுட்டுக் கொண்டார் என்று இன்று வரை சொல்லப்படுகிறது. எம்ஆர் ராதா தன்னை சுட்டது எம்ஜிஆர் தான் என்று வாக்குமூலம் அளித்தார். ஒரே நேரத்தில் இருவரும் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் தான் சிகிச்சை பெற்றார்கள். மேலும் இந்த வழக்கு நீதிமன்றம் வரை கூட சென்று எம் ஆர் ராதாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

சமீபத்தில் எம் ஆர் ராதாவின் மகன் நடிகர் ராதாரவி தன் அப்பா எதற்காக எம்ஜிஆரை சுட்டார் என்று ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். ‘பெற்றால் தான் பிள்ளையா’ என்ற எம்ஜிஆர் ஹீரோவாக நடித்த திரைப்படத்திற்காக எம் ஆர் ராதா அந்தப் படத்தின் தயாரிப்பாளர் வாசுவுக்கு ஒரு லட்சம் கடன் கொடுத்திருக்கிறார். படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. பணத்திற்கு பொறுப்பு ஏற்றுக்கொண்ட எம்ஜிஆர் பணத்தை திருப்பி கொடுக்காமல் நான்கு, ஐந்து நாட்களாக அலையவிட்டு இருக்கிறார். ராதா தன்னுடைய தோட்டத்து பத்திரத்தை வைத்து பணம் கொடுத்ததால் கோபமடைந்து எம்ஜிஆரை சுட்டதாக ராதாரவி தற்போது சொல்லி இருக்கிறார்.

Also Read: அரை டஜன் பொண்டாட்டி, ஒரு டஜன் பிள்ளைகள்.. ராஜ வாழ்க்கை வாழ்ந்த எம்ஜிஆர் பட முரட்டு வில்லன்

Next Story

- Advertisement -