கட்டின நாலு பொண்டாட்டியும் சரியில்லை.. குணசேகரனின் ஆணவத்தால் விபரீத முடிவை எடுத்த ஆதிரா

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிராவின் திருமண விஷயத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் குடும்பத்தில் உள்ளவர்களின் விருப்பத்திற்கு மாறாக குணசேகரன் பல்வேறு வகையில் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் ஜனனியின் உதவியுடன் ஆதிரா தனது காதலனை சந்தித்து பேசியுள்ளார். இதனை கரிகாலன் எப்படியோ தெரிந்து கொண்டு கதிருடன் அங்கு சென்று இருக்கிறார். பின்னர் இவர்களுக்குள்ளே கைகலப்பு நிகழ்ந்த நிலையில் பெரும் சம்பவமே அரங்கேறி உள்ளது.

ஒரு காலகட்டத்தில் அண்ணன்களுடன் சேர்ந்து அடாவடித்தனம் செய்து கொண்டிருந்த ஆதிரா தற்பொழுது மனம் திருந்தியுள்ளார். அதிலும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஏற்பட்ட அதே நிலைமை தற்பொழுது தனக்கே நேர்ந்திருப்பதை நினைத்து மிகவும் மனம் நொந்து பேசியுள்ளார்.

தனது அண்ணனுக்கு எதிராக தனதுவிருப்பத்தினை ஆதிரா தெரிவித்துள்ளார். இந்நிலையில் குணசேகரன் ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளார். நீ வீட்டை விட்டு போனால் திருமணம் ஆகி செல்ல வேண்டும், இல்லை என்றால் பிணமாக தான் போக வேண்டும் என்று தீர்மானமாக கூறியுள்ளார்.

அதிலும் வீட்டிற்கு வந்த மருமகள்களை வந்ததில் ஒன்று கூட உருப்படியாக இல்லை என்று கதிரிடம் மனம் நொந்து பேசி வருகிறார். இந்நிலையில் அண்ணன் பேசியதை மனதில் வைத்துக் கொண்டு ஆதிரா தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு விபரீத முடிவினை எடுத்துள்ளார். குடும்பத்தில் உள்ள அனைவரும் பரபரப்பாக உள்ள நிலையில், குணசேகரனோ நல்லா டிராமா போடுகிறீர்கள் என்று பேசி வருகிறார். 

இப்படி இக்கட்டான சூழ்நிலையிலும் கூட இவர் ஆணவத்தில் பேசி வருவது சீரியல் பார்ப்பவர்களை கடுப்பேற்றுகிறது. ஆனால் குடும்பமே ஆதிராவிற்கு பக்கபலமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஆதிராவை விபரீத முடிவை எடுக்க வைத்ததற்காக கண்டிப்பாக குணசேகரனை சிறையில் வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.