சில நடிகர்கள் ஆரம்பத்தில் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் படமாக ஆனது. ஆனால் அதன் பிறகு வெற்றி அடைவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் சற்று பின்தங்கி போய் விட்டார்கள் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட நடிகர்களையும் மற்றும் அவர்கள் படங்களை பற்றியும் பார்க்கலாம்.
ரோஜா கூட்டம் : இயக்குனர் சசி இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு காதல் திரைப்படமாக ரோஜா கூட்டம் வெளிவந்தது. இப்படத்தில் ஸ்ரீகாந்த், பூமிகா, ரகுவரன், ராதிகா மற்றும் விவேக் ஆகியோர் நடித்தார்கள். இப்படம் அழகான காதல் உணர்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இதில் ஸ்ரீகாந்த் அறிமுக நாயகனாக நடித்த முதல் படம். இந்த முதல் படத்திலேயே இவர் நடிப்பை மெய்சிலிர்க்க வைத்து ரசிக்கும் படியாக அமைத்திருப்பார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.
Also read: வாய்ப்பு கிடைத்தும் நான் தவறவிட்ட முக்கியமான படங்கள்.. இப்பொழுது கண்ணீர் விடும் ஸ்ரீகாந்த்
12B : ஜீவா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு 12B என்ற திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் ஷியாம், சிம்ரன், ஜோதிகா மற்றும் விவேக் ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தில் தான் ஷியாம் முதன் முதலாக நடிகராக அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே கனவு கன்னியாக வலம் வந்த சிம்ரன், ஜோதிகா இவர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது. இவருடைய நடிப்பிற்கு விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றார்.
காதல் தேசம்: கதிர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு காதல் தேசம் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் வினித், அப்பாஸ், தபு மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்தார்கள். இதில் அப்பாஸ் அறிமுகமான முதல் படம். இக்கதை நட்புக்கும், காதலுக்கும் இடையே ஏற்படும் உணர்வுகளை ஆழமாக வெளிக்காட்டிருப்பார்கள். இது அப்பாஸ்க்கு முதல் படமாக இருந்தாலும் நடிப்பால் மக்கள் மனதை வென்றார். இப்படம் விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆபிஸில் வெற்றி படமாக ஆனது.
Also read: தொப்பையும் தொந்தியும் ஆக மாறிய சாக்லேட் ஸ்டார் ஷியாம்.. சூதாட்டத்தில் நல்லா கல்லா கட்டிருச்சு போல!
5 ஸ்டார்: சுகி கணேசன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு 5 ஸ்டார் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் பிரசன்னா, கனிகா, கிருஷ்ணா ஆகியோர் நடித்தார்கள். இதில் பிரசன்னா அறிமுகமான முதல் படம். இக்கதையானது ஒரு இளைஞரின் ஆசை நிறைவேறாமல் அதனால் ஏற்படும் ஏமாற்றம் மற்றும் ஒரு பொழுதுபோக்கு படமாகவும் எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக அமைந்திருக்கும்.
வெண்ணிலா கபடி குழு: சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஷ்ணு விஷால், கிஷோர் மற்றும் சரண்யா மோகன் ஆகியோர் நடித்தார்கள். இது விஷ்ணு விஷாலுக்கு அறிமுகமான முதல் படம். இப்படம் விளையாட்டு, காதல் மற்றும் நகைச்சுவை போன்று கலவையாக அமைந்திருக்கும். இப்படம் வணிக ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியான படமாகவும் மாறியது.
Also read: எல்லா பக்கமும் பகையை வளர்த்துக் கொள்ளும் விஷால்.. விக்ராந்த், விஷ்ணு விஷால் கூட இப்படி ஒரு மோதலா?